» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 950 மனுக்கள்: நலத்திட்ட உதவிகளை வழங்கினார் ஆட்சியர்!
திங்கள் 16, பிப்ரவரி 2026 3:52:24 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் க.இளம்பகவத், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் கல்வி உதவித்தொகை மற்றும் முதியோர்/விதவை உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் பட்டா மாறுதல் உத்தரவுகள், கலைஞரின் கனவு இல்லம், தொழில் கடனுதவி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 950 மனுக்களை அளித்தனர்:
மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுத்து தகுதியுள்ள பயனாளிகளுக்கு விரைந்து தீர்வு காண துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். முன்னதாக, 13 மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியர், கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
கடந்த 06.12.2025 அன்று தமிழக முதலமைச்சரால் காலாங்கரையில் திறந்து வைக்கப்பட்ட புதிய அறிவுசார் மையத்தின் சாவியை, இன்றைய கூட்டத்தில் ஆட்சியர் செல்வ விநாயகர் மகளிர் குழுவிடம் ஒப்படைத்தார்.
கூட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட பிற உதவிகளை ஆட்சியர் வழங்கினார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.5,479 மதிப்பிலான தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
பனை விதைகள் நடும் நெடும் பணி 2025" திட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டு, நீர்நிலைகளில் பனை விதைகளை நட்டதற்காக Mother Social Service Trust மற்றும் கிராம உதயம் இயக்கம் ஆகிய தொண்டு நிறுவனங்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், மாவட்ட வன அலுவலர் இளையராஜா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் சேதுராமலிங்கம் (பொது), உலகநாதன் (சத்துணவு), மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பென்னட் ஆசீர், மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரமநாயகம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆத்தூர் வெற்றிலை: வரலாற்று ஆவணக் குழுவின் விழிப்புணர்வுப் புத்தகம் வெளியீடு!
திங்கள் 6, ஏப்ரல் 2026 11:14:05 AM (IST)

ஓட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி யாருக்கு? பலமுனை போட்டியால் வாக்குகள் சிதறும் நிலை!
திங்கள் 6, ஏப்ரல் 2026 10:33:25 AM (IST)

மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாப சாவு!
திங்கள் 6, ஏப்ரல் 2026 10:24:56 AM (IST)

செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனித் திருவிழா தொடக்கம்: ஏப்ரல் 13ல் தேரோட்டம்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:20:49 AM (IST)

பைக் மீது அரசு பேருந்து மோதல்: இளைஞர் பலி!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:00:53 AM (IST)

ஆட்சியர் காரை மறித்து அவதூறு பேசிய வாலிபர்; கார் பறிமுதல் – போலீஸ் விசாரணை!
திங்கள் 6, ஏப்ரல் 2026 7:56:38 AM (IST)







