» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கிள்ளிக்குளம் வேளாண் கல்லூரி தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கோரி ஆட்சியரிடம் மனு

திங்கள் 16, பிப்ரவரி 2026 12:17:59 PM (IST)



கிள்ளிக்குளம் வ.உ.சி. வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நீண்ட காலமாகப் பணியாற்றி வரும் பண்ணைத் தொழிலாளர்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிக்குளம் வ.உ.சி. வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நீண்ட காலமாகப் பணியாற்றி வரும் பண்ணைத் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனு: கிள்ளிக்குளம் வ.உ.சி. வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். 

இவ்வளவு கால அனுபவம் இருந்தும் தங்களை இதுவரை பணி நிரந்தரம் செய்யவில்லை. ஆண்டுக்கு 238 நாட்கள் கூட தங்களுக்குப் பணி வழங்கப்படுவதில்லை. இதற்குக் காரணம் கேட்டால் போதிய நிதி இல்லை என்று நிர்வாகத் தரப்பில் கூறுகின்றனர். ஒப்பந்தப் பணிகளுக்கு மட்டும் நிதி ஒதுக்கும் நிர்வாகம், தங்களுக்குப் பணி வழங்க நிதி இல்லை எனக் கூறுவது முரணாக உள்ளது. 

தமிழக அரசின் அரசாணை 153-ன் அடிப்படையில், எங்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பண்ணைத் தொழிலாளர் சங்கம் சார்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory