» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளியில் பனை விதைகள் விதைப்பு விழா
திங்கள் 22, டிசம்பர் 2025 9:33:47 PM (IST)

பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்து ஒன்று பனை விதைகள் விதைக்கும் விழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம்,குரும்பூர் அருகே உள்ள பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பனை மரத்தின் நன்மை கருதியும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டியும், பள்ளி மற்றும் பள்ளி சுற்றுப்புற பகுதி, பணிக்கநாடார்குடியிருப்பு, கீழ நாலுமாவடி பகுதிகளில் ஆயிருத்து ஒன்று பனைமர விதைகள் நடும் விழா நடந்தது. பள்ளி செயலாளர் முருகன் தலைமை வகித்தார். செல்வ விநாயகர் கல்வி அபிவிருத்திச்சங்க தலைவர் ராஜசேகர், பொருளாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருச்செந்தூர் வன சரக ரேஞ்சர் ஆத்திலிங்கம் பனை விதைகளை நட்டி விழாவை துவக்கி வைத்தார். இதில் தலைமையாசிரியர் (பொறுப்பு) சந்திரசேகர் மற்றும் குரும்பூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மம்முது, ஆங்கிலப்பள்ளி முதல்வர் டாக்டர் மௌலானா தேவி, ஏரல் வியாபாரி சங்க செயலாளர் விஜயராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை என்.சி.சி., அலுவலர் ராஜ்குமார், என்.எஸ்.எஸ்., அலுவலர் கண்ணன் பிரபு மற்றும் பசுமைப்படை அலுவலர் ராஜதுரை ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அனல்மின் நிலையத்தில் செங்கல் உற்பத்தியாளர்கள் முற்றுகை: உலர் சாம்பல் வழங்க கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 8:37:39 PM (IST)

தூத்துக்குடியில் ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது
திங்கள் 22, டிசம்பர் 2025 8:33:25 PM (IST)

வ.உ.சிதம்பரனார் துறைமுகம் மிக நீளமான சரக்கு பெட்டக கப்பலை கையாண்டு புதிய சாதனை!
திங்கள் 22, டிசம்பர் 2025 5:57:52 PM (IST)

பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் தேசிய கணித தினம்
திங்கள் 22, டிசம்பர் 2025 5:44:42 PM (IST)

மக்கள் குறை களையும் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்!
திங்கள் 22, டிசம்பர் 2025 4:23:22 PM (IST)

ஜனவரி 16ஆம் தேதி புனித மிஃராஜ் இரவு அனுசரிப்பு : காஜிகள் கூட்டமைப்பு அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 4:13:06 PM (IST)










