» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் தேசிய கணித தினம்
திங்கள் 22, டிசம்பர் 2025 5:44:42 PM (IST)

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் கணித மேதை ராமானுஜன் பிறந்ததினத்தை முன்னிட்டு தேசிய கணித தினம் கொண்டாடப்பட்டது.
கணித மேதை இராமானுஜன் பிறந்த நாளான டிசம்பர் 22-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய கணித தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் தேசிய கணித தினம் இன்று கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்து ராமானுஜரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கணித பயிற்சி ஆசிரியை திவ்யா ராமானுஜரின் வாழ்க்கை, கணித கண்டுபிடிப்புகள், 1729 என்ற எண்ணின் சிறப்புகள் குறித்து விளக்கி கூறினார்.
அதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு கணித வினாடி வினா போட்டிகள் நடைபெற்றன. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் கணித முதுகலைஆசிரியை பரிமளா, சரஸ்வதி, அந்தோணி ஆஸ்மின். பயிற்சி ஆசிரியைகள் உமா மகேஸ்வரி, இந்து இசக்கி, விஜயலட்சுமி. வள்ளிக்குட்டி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பயிற்சி ஆசிரியை விஜி நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அனல்மின் நிலையத்தில் செங்கல் உற்பத்தியாளர்கள் முற்றுகை: உலர் சாம்பல் வழங்க கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 8:37:39 PM (IST)

தூத்துக்குடியில் ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது
திங்கள் 22, டிசம்பர் 2025 8:33:25 PM (IST)

வ.உ.சிதம்பரனார் துறைமுகம் மிக நீளமான சரக்கு பெட்டக கப்பலை கையாண்டு புதிய சாதனை!
திங்கள் 22, டிசம்பர் 2025 5:57:52 PM (IST)

மக்கள் குறை களையும் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்!
திங்கள் 22, டிசம்பர் 2025 4:23:22 PM (IST)

ஜனவரி 16ஆம் தேதி புனித மிஃராஜ் இரவு அனுசரிப்பு : காஜிகள் கூட்டமைப்பு அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 4:13:06 PM (IST)

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் இலவச வீடு வழங்க மாற்றுத்திறனாளி இளம்பெண் கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 4:09:29 PM (IST)










