» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வ.உ.சிதம்பரனார் துறைமுகம் மிக நீளமான சரக்கு பெட்டக கப்பலை கையாண்டு புதிய சாதனை!

திங்கள் 22, டிசம்பர் 2025 5:57:52 PM (IST)



தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் அதிக சரக்குபெட்டகங்களை கையாளும் திறன் உடைய மிக நீளமான சரக்கு பெட்டக கப்பலை கையாண்டு வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

தூத்துக்குடி  வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் நேற்று டிசம்பர் 21, தக்ஷின் பாரத் கேட்வே சரக்குபெட்டக முனையத்தில், 304 மீட்டர் நீளம் மற்றும் 40 மீட்டர் அகலம் கொண்ட M.V. MSC மைக்கேலாவை என்ற சரக்குபெட்டக கப்பலை வெற்றிகரமாக கையாண்டு சாதனை படைத்துள்ளது. இது இந்தியாவின் கடல்சார் துறையில் அதன் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை வலுப்படுத்தும் விதமாக இக்கப்பலை கையாள்வதின்  மூலம், 6,724 TEU  சரக்கு பெட்டகங்களை கையாளும் திறன் கொண்ட மிக நீளமான சரக்கு பெட்டக கப்பலின் வருகை துறைமுகத்தின் ஒரு மைல்கல்லை எட்டியது.

துறைமுகத்தில் 2022 மே மாதம் 299.50 மீட்டர் நீளம் LOA உடன் M.V. MSC  பெட்ரா என்ற சரக்குபெட்டக கப்பலை கையாள்வதில் இருந்து MSC  மைக்கேலாவின் வருகை வரையிலான வளர்ச்சி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தின் நிலையான செயல்பாட்டுத் திறனில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது. 

பனாமாவின் கொலோன் துறைமுகத்திலிருந்து வந்த MSC  மைக்கேலா என்ற சரக்குபெட்டக கப்பல், வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 3977 TEU சரக்கு பெட்டகங்கள் கையாளப்பட்டு மீண்டும் இலங்கையின் கொழும்பு துறைமுகத்திற்கு பயணிக்கும். இதில் 2676 TEU சரக்குபெட்டகங்கள் இறக்குமதிக்கும், 1104 TEU சரக்குபெட்டகங்கள் ஏற்றுமதிக்கும், 148 வுநுரு சரக்கு பெட்டகங்கள மறுசீரமைப்பு செய்யுவும் மற்றும் 49 TEU சரக்கு பெட்டகங்களை சரக்குபரிமாற்றம் ஆகிய செயல்பாடுகள் நடைபெற்றது. 

நடப்பு நிதியாண்டில் நவம்பர் 2025-26 வரை, துறைமுகம் 5,62,928 வுநுரு சரக்கு பெட்டகங்களைக் கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது, இது 2024-25 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 5,20,919 வுநுரு சரக்குபெட்டகளை விட  அதிகமாக கையாண்டு 8.06% அதிகரித்துள்ளது. வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தின் தக்ஷின் பாரத் கேட்வே சரக்குபெட்டக முனையத்தில் நடைபெற்ற நிகழ்வில்,  வ.உ.சி துறைமுகத்தின் தலைவர்,  சுஷாந்த் குமார் புரோஹித் மைக்கேலா சரக்குபெட்டக கப்பலை வெற்றிகரமான கையாளுதல், துறைமுகத்தின் சமீபத்திய உள்கட்டமைப்பு மேம்பாடுகளை பிரதிபலிக்கிறது என்று கூறினார், 

அதாவது அதிகபட்ச மிதவை ஆழம் 14.20 மீட்டராக உயர்த்துதல், துறைமுக கப்பல் சுற்றுவட்ட பாதையினை 488 மீட்டரிலிருந்து 550 மீட்டராக விரிவுபடுத்துதல், துறைமுகத்திற்குள் நேரடி நுழைவு சேவை போன்ற வசதியை செயல்படுத்துதல் மற்றும் 60 டன் போலார்ட் புல் திறன் கொண்ட 4வது இழுவை கப்பல் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது ஆகும். மேலும் அவர் கூறுகையில் வரவிருக்கும் வெளி துறைமுக திட்டம் தென் இந்தியாவிற்கான முக்கிய கடல் வர்த்தக நுழைவாயிலாக வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தின் நிலையை குறிப்பிடத்தக்க அளவில் வலுப்படுத்தும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், வ.உ.சி துறைமுகத் தலைவர்  சுஷாந்த் குமார் புரோஹித், துணைத் தலைவர்   ராஜேஷ் சௌந்தரராஜன்,  தலைமை கண்காணிப்பு அதிகாரி,  கவின் மஹாராஜ், தூத்துக்குடி சுங்க ஆணையர்  விகாஸ் நாயர், IRS கப்பலின் கேப்டன்  வுஜ்னோவிக் டிரிபோ, DBGT முனையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி  செந்தில் குமார், MSC ஏஜென்சி இந்தியா லிமிடெட்டின் மூத்த பொது மேலாளர்  பென்னி ஜார்ஜ், துறைமுகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital






Thoothukudi Business Directory