» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது
திங்கள் 22, டிசம்பர் 2025 8:33:25 PM (IST)
தூத்துக்குடியில் ஆடு திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி டி. சவேரியார் புரம் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் சேவியர் ஜெகன் மனைவி ஜெயலட்சுமி (40), இவர் தனது வீட்டில் ஏராளமான ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 6ம் தேதி வீட்டு முன்பு மேய்ந்து கொண்டிருந்த ஒரு ஆட்டை இரண்டு பேர் பைக்கில் திருடி சென்றுவிட்டனர். அதன் மதிப்பு ரூ 10 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், தூத்துக்குடி எஸ்எஸ் மாணிக்க புரத்தை சேர்ந்த அந்தோணி மகன் பிரவீன் குமார் (24), டி சவேரியார்புரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த ராஜ் மகன் விக்னேஷ்குமார் (25) ஆகிய 2பேரும் ஆட்டை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2பேரையும் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளியில் பனை விதைகள் விதைப்பு விழா
திங்கள் 22, டிசம்பர் 2025 9:33:47 PM (IST)

அனல்மின் நிலையத்தில் செங்கல் உற்பத்தியாளர்கள் முற்றுகை: உலர் சாம்பல் வழங்க கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 8:37:39 PM (IST)

வ.உ.சிதம்பரனார் துறைமுகம் மிக நீளமான சரக்கு பெட்டக கப்பலை கையாண்டு புதிய சாதனை!
திங்கள் 22, டிசம்பர் 2025 5:57:52 PM (IST)

பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் தேசிய கணித தினம்
திங்கள் 22, டிசம்பர் 2025 5:44:42 PM (IST)

மக்கள் குறை களையும் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்!
திங்கள் 22, டிசம்பர் 2025 4:23:22 PM (IST)

ஜனவரி 16ஆம் தேதி புனித மிஃராஜ் இரவு அனுசரிப்பு : காஜிகள் கூட்டமைப்பு அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 4:13:06 PM (IST)










