» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அனல்மின் நிலையத்தில் செங்கல் உற்பத்தியாளர்கள் முற்றுகை: உலர் சாம்பல் வழங்க கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 8:37:39 PM (IST)

தூத்துக்குடி எஸ்.இ.பி.சி அனல் மின்நிலைய நிறுவனம் உலர் சாம்பலை, நேரடியாக உலர் சாம்பல் செங்கல் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்க வலியுறுத்தி உலர் சாம்பல் செங்கல் உற்பத்தியாளர்கள் அனல்மின் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
தூத்துக்குடி துறைமுகம் சாலையில் உள்ள எஸ்.இ.பி.சி என்ற தனியார் அனல் மின் நிலையம், அதிலிருந்து வெளியேற்றப்படும் உலர் சாம்பல் கழிவுகளை, உலர் சாம்பல் செங்கல் உற்பத்தியாளர்களுக்கு 20 சதவீதம் வழங்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவின்படி வழங்கி வந்தது.
இந்நிலையில், எஸ்.இ.பி.சி நிறுவனம் உலர் சாம்பலை, உலர் சாம்பல் செங்கல் உற்பத்தி நிறுவனங்களுக்கு டெண்டர் மூலம் வழங்குவதாக அறிவித்துவிட்டு தற்போது வரை டெண்டர் விண்ணப்பம் யாருக்கும் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், டெண்டர் விண்ணப்பத்தை ஹைதராபாத்தில் உள்ள நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் சென்று வாங்க வேண்டுமென தெரிவித்துள்ளது.
மேலும், குறிப்பிட்ட சிலருக்கு உலர் சாம்பல் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் உலர் சாம்பல் செங்கல் உற்த்தியாளர்கள் பாதிக்கப்படுவதாக கூறி, தூத்துக்குடி எஸ்.இ.பி.சி நிறுவனத்தை தமிழ்நாடு உலர் சாம்பல் செங்கல் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து தமிழ்நாடு உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் சிவக்குமார் கூறுகையில், எஸ்.இ.பி.சி நிறுவனம் உலர் சாம்பலை, நேரடியாக உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும். நிறுவனம் சில குறிப்பிட்ட நபர்களிடம் உலர் சாம்பலை வழங்குவதால் அவர்களிடம் உற்பத்தியாளர்கள் வாங்கும்போது ஒரு டன் ரூ.700 வரை கொடுக்க வேண்டியுள்ளது. எனவே, எஸ்.இ.பி.சி. நிறுவனம் உலர் சாம்பலை முறையாக டென்டர் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளியில் பனை விதைகள் விதைப்பு விழா
திங்கள் 22, டிசம்பர் 2025 9:33:47 PM (IST)

தூத்துக்குடியில் ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது
திங்கள் 22, டிசம்பர் 2025 8:33:25 PM (IST)

வ.உ.சிதம்பரனார் துறைமுகம் மிக நீளமான சரக்கு பெட்டக கப்பலை கையாண்டு புதிய சாதனை!
திங்கள் 22, டிசம்பர் 2025 5:57:52 PM (IST)

பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் தேசிய கணித தினம்
திங்கள் 22, டிசம்பர் 2025 5:44:42 PM (IST)

மக்கள் குறை களையும் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்!
திங்கள் 22, டிசம்பர் 2025 4:23:22 PM (IST)

ஜனவரி 16ஆம் தேதி புனித மிஃராஜ் இரவு அனுசரிப்பு : காஜிகள் கூட்டமைப்பு அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 4:13:06 PM (IST)










