» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

தூத்துக்குடியில் நடைபெற்ற உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
தூத்துக்குடி விகாசா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலவாழ்வுச் சங்கம் மற்றும் மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற நலவாழ்வு சங்கம் இணைந்து ஒருங்கிணைத்த உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் கலந்துகொண்டு உரையாற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், மாநகர சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஸ்வரன் சிங் மற்றும் தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலவாழ்வு சங்க மாநில தலைவர் மருத பெருமாள், செயலாளர் ஜெயராஜ், பொருளாளர் செல்வகுமரன், சங்கத்தின் கிளை அமைப்பு தலைவர்கள் அற்புதராஜ், எப்போதும் வென்றான் மொட்டையசாமி, மேலக்கரந்தை அய்யனார், மேல கூட்டுடன்காடு ராமகிருஷ்ணன், செக்காரக்குடி ஆறுமுகம், புதுக்கோட்டை பொன்ராஜ், மேலத் தட்டப்பாறை சின்னத்துரை, குமரட்டியாபுரம் பிச்சாண்டி, புதியம்புத்தூர் தமிழ்செல்வி, வேம்பார் பெரியசாமி, கோவில்பட்டி முத்து மாடசாமி, ஏரல் சுல்தான், குலசேகரப்பட்டினம் கமல் ஜவகர், கிருஷ்ணராஜபுரம் அந்தோணி ராஜ், தாளமுத்து நகர் ராமகிருஷ்ணன், தூத்துக்குடி காது கேளாதோர் முன்னேற்ற நலவாழ்வு சங்கத்தின் தலைவர் பேச்சிமுத்து, துணை தலைவர் கமல் தனசேகர், செயலாளர் தங்கராஜ், பொருளாளர் சின்னதுரை, சகா கலை குழுவைச் சேர்ந்த சகா. சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)

தூத்துக்குடியில் மீன்கள் விலை கிடுகிடு உயர்வு : கிலோ ரூ.1,300-க்கு விற்பனை
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:26:19 AM (IST)










