» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மீன்கள் விலை கிடுகிடு உயர்வு : கிலோ ரூ.1,300-க்கு விற்பனை
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:26:19 AM (IST)
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து. கடந்த வாரம் ரூ.750-க்கு விற்பனையான ஒரு கிலோ சீலா மீன் நேற்று ரூ.1,300-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நாட்டு படகு மீனவர்கள் நேற்று கரைக்கு திரும்பினர். கடல் பகுதியில் வீசி வரும் பலத்த காற்று காரணமாக நேற்று கரைக்கு திரும்பிய மீனவர்களுக்கு மீன்பாடு இல்லை. இதனால் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டது.
திரேஸ்புரம் மீன் ஏலக் கூடத்தில் குறைந்த அளவு மீன்களே விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் மீன்கள் வாங்க காலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக மீன்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன் பிடி துறைமுகத்தில் கடந்த வாரம் கிலோ ரூ.750-க்கு விற்பனையான சீலா மீன் நேற்று ரூ.1300 வரையும், ரூ.350-க்கு விற்பனையான விளை மீன், ஊழி, பாறை ஆகிய மீன்கள் கிலோ ரூ.500 முதல் ரூ.800 வரையும் அதிரடியாக விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டன.
அதேபோல் ரூ.200-க்கு விற்பனையான கேரை, சூரை, ஐலேஷ் ஆகிய மீன்கள் கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனையாகின. மேலும் நன்டு ஒரு கிலோ ரூ.400 முதல் 600 வரை விற்பனையானது. வங்கனை மீன் ஒரு கூடை ரூ.3,500 வரை விற்பனை செய்யப்பட்டது. மீன்களின் விலை உயர்ந்தபோதிலும் ஏராளமான பொதுமக்களும், வியாபாரிகளும் போட்டிபோட்டு வாங்கி சென்றனர். மீன் பாடு குறைந்தாலும் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










