» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!

ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)

கயத்தாறு அருகே பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயினை பறித்து சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள தெற்கு இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் சுடலைமணி. இவர் சென்னையில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார்.இதனால் இவரது மனைவி பூமாடத்தி (39) இங்கு தனியாக வசித்து வருகிறார். இவர் நெல்லையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். 

நேற்று முன்தினம் காலையில் பூமாடத்தி வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு இரவு சுமார் 8 மணிக்கு வீடு திரும்பினார். ஆனால் அதற்கு முன்னதாகவே அவரது வீட்டு வளாகத்திற்குள் புகுந்த மர்ம நபர், வெளிப்புறமாக உள்ள மாடிப்படியில் பதுங்கி இருந்துள்ளார். இதனை அறியாமல் பூமாடத்தி வீட்டுக்கு வந்தபோது, திடீரென மர்மநபர் மாடிப்படியில் இருந்து கீழே குதித்தார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த நபர் பூமாடத்தியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை பிடித்து இழுத்தார். சுதாரித்துக்கொண்ட பூமாடத்தி செயினை விடாமல் மல்லுக்கட்டினார். இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர், பூமாடத்தியை சரமாரி அடித்து உதைத்து கீழே தள்ளிவிட்டு செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து கொள்ளையனை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து பூமாடத்தி கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்துவிட்டு தப்பி ஓடிய கொள்ளையனை வலைவீசி தேடி வருகின்றனர். 

இவரது வீட்டில் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் 28 தேதியன்று யாரும் இல்லாதபோது 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது. அவர்கள் இதுவரை போலீசிடம் பிடிபடாத நிலையில் தற்போது மீண்டும் பூமாடத்தியின் கழுத்தில் கிடந்த செயினை கொள்ளையன் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





CSC Computer Education




Thoothukudi Business Directory