» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடியில் நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகில் உள்ள கீழ ஈரால் நியூ காலனியைச் சேர்ந்தவர் சோலையப்பன் மகன் ஜோதி முத்து (42), இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு ட்ரான்ஸ்போர்ட் கம்பெனியில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு மீனாட்சி பட்டியில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு கல் லோடுகளை டிப்பர் லாரியில் ஏற்றுக் கொண்டு துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
தூத்துக்குடி துறைமுகம், மதுரை பைபாஸ் ரோடு எப்.சி.ஐ. ரவுண்டானா அருகே வரும்போது தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து மேல மருதூர் கிராமத்தில் உள்ள அனல்மின் நிலையத்திற்கு கரி லோடுகளை ஏற்றி சென்ற ஒரு லாரி பட்டை கட்டு உடைந்து பிரேக் டவுன் ஆகி நின்று கொண்டிருந்தது. இந்த லாரியில் பின்புறத்தில் கல்லோடு ஏற்றி வந்த லாரி மோதியதில் முன் பகுதி முழுவதும் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த டிரைவர் ஜோதி முத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்திற்கு சென்றனர். மேலும் சிப்காட் காவல் நிலைய தீயணைப்பு படையினர் விரைந்து வந்து இரண்டு லாரிக்குள் ஈடுபாடுக்குள் கிடந்த டிரைவர் ஜோதி முத்து உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)

தூத்துக்குடியில் மீன்கள் விலை கிடுகிடு உயர்வு : கிலோ ரூ.1,300-க்கு விற்பனை
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:26:19 AM (IST)










