» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!

ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3 ஆயிரத்து 686 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மொத்த தீர்வு தொகை ரூ.16 கோடியே 23 லட்சத்து 39 ஆயிரத்து 290 ஆகும். 

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் தலைவர் ஆர். வசந்தி தலைமை தாங்கினார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்னிலை வகித்து தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியில் 6 அமர்வுகளிலும், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூரில் தலா 2 அமர்வுகளிலும், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் மற்றும் சாத்தான்குளத்தில் தலா ஒரு அமர்வு என மொத்தம் 15 அமர்வுகளில் வழக்குகள் நடந்தது.இதில் சமாதானமாக செல்லக்கூடிய குற்றவியல் வழக்குகள், சிவில், வங்கிக்கடன், மணவாழ்க்கை வழக்குகள் உள்ளிட்டவை விசாரணைக்கு எடுக்கப்பட்டன.

நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி தாண்டவன், 2-வது கூடுதல் மாவட்ட நீதிபதி பீரித்தா, மகிளா நீதிமன்ற நீதிபதி முருகன், பி.சி.ஆர் நீதிமன்ற நீதிபதி வஷீத் குமார், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ராஜகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 429 வங்கி வாராக்கடன் வழக்குகளில் 212 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மொத்த தீர்வுத்தொகை ரூ.4 கோடியே 90 லட்சத்து 41 ஆயிரத்து 823 ஆகும்.

மேலும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 4 ஆயிரத்து 588 வழக்குகளில் ரூ.11 கோடியே 32 லட்சத்து 97 ஆயிரத்து 467 மதிப்புள்ள 3,474 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மொத்தம் 5,017 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, 3,686 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மொத்த தீர்வு தொகை ரூ.16 கோடியே 23 லட்சத்து 39 ஆயிரத்து 290 ஆகும். இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் முதுநிலை உரிமையியல் நீதிபதி ஏ.வி. சுபாஷினி செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory