» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நெல்லை சரகத்தில் 59 காவல் ஆய்வாளர்கள் மாற்றம் : டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி உத்தரவு

சனி 13, டிசம்பர் 2025 8:36:14 PM (IST)

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நெல்லை சரகத்தில் 59 காவல் ஆய்வாளர்களை பணியிடம் மாற்றம் செய்து டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை காவல் சரகத்திற்கு உட்பட்ட தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 59 காவல் ஆய்வாளர்கள் பணியிடம் மாற்றம் செய்து நெல்லை காவல் சரக பொறுப்பு டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது: நெல்லை மாவட்டம் தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி தூத்துக்குடி மாவட்டம் ஏரலுக்கும், குமரி மாவட்டம் கருங்கல் மோகன அய்யர் தூத்துக்குடி மத்திய பாகத்திற்கும், கன்னியாகுமரி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு சாந்தகுமாரி கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும், நெல்லை மாநகர சைபர் கிரைம் சண்முகவடிவு சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும், தச்சநல்லூர் தில்லை நாகராஜன் முறப்பநாடுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

மேலப்பாளையம் குற்றப்பிரிவு ரசிதா திருச்செந்தூர் அனைத்து மகளிருக்கும், நெல்லை டவுன் காசிபாண்டியன் தூத்துக்குடி வடபாகத்திற்கும், ஆழ்வார்குறிச்சி ராஜேஷ் புதூருக்கும், நெல்லை சந்திப்பு ராமேசுவரி தூத்துக்குடி குற்ற ஆவண காப்பகத்திற்கும், குளச்சல் ஜெயலட்சுமி கழுகுமலைக்கும், அருமணை வீராசாமி ஆழ்வார்திருநகரிக்கும், திருவேங்கடம் காளிமுத்து நாலாட்டின்புதூருக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.

தென்காசி, சங்கரன்கோவில்

மானூர் சந்திரசேகரன் அச்சன்புதூருக்கும், சீதபற்பநல்லூர் சுப்புலட்சுமி தென்காசி அனைத்து மகளிருக்கும், மூலைக்கரைப்பட்டி ராஜகுமாரி இலத்தூருக்கும், வீரவநல்லூர் சுஜித் ஆனந்த் சங்கரன்கோவில் தாலுகாவுக்கும், நெல்லை மாவட்டம் ஸ்டீபன் ஜோஸ் சங்கரன்கோவில் டவுனுக்கும், நெல்லை குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஜெயலட்சுமி தென்காசி குற்றப்பிரிவுக்கும், நெல்லை மதுவிலக்கு இந்திரா புளியங்குடி அனைத்து மகளிருக்கும், நெல்லை தீவிர குற்றத்தடுப்பு பிரிவு சாம்சன் தென்காசி மாவட்ட குற்ற ஆவண காப்பகத்துக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.

நாகர்கோவில்

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு குணசேகரன் ஆழ்வார்குறிச்சிக்கும், நெல்லை மாநகரம் சங்கரீஸ்வரி கடையநல்லூர் குற்றப்பிரிவுக்கும், பாளையங்கோட்டை மகேஷ்குமார் குற்றாலத்திற்கும், தூத்துக்குடி வடபாகம் பாலமுருகன் திருவேங்கடத்துக்கும், நெல்லை மாவட்டம் ஜென்சி நாகர்கோவில் மதுவிலக்கிற்கும், நெல்லை ரமா கொட்டிகோட்டிற்கும், கழுகுமலை பத்மாவதி ராஜாக்கள்மங்கலத்திற்கும், பாளையங்கோட்டை குற்றப்பிரிவு பொன்ராஜ் எஸ்.டி.குளத்துக்கும், பேட்டை விமலன் கருங்கல் காவல் நிலையத்துக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.

பாளையங்கோட்டை அனைத்து மகளிர் கோமதி குமரி மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கும், நெல்லை மாநகரம் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தக்கலை மதுவிலக்கு பிரிவுக்கும், முறப்பநாடு ஷேக் அப்துல் காதர் குளச்சலுக்கும், தூத்துக்குடி மத்திய பாகம் பாஸ்கரன் அருமணைக்கும், நாகர்கோவில் மதுவிலக்கு ஜானகி நெல்லை மாவட்ட பெண்கள் பாதுகாப்பு பிரிவுக்கும், திருச்செந்தூர் மகாலட்சுமி நெல்லை மாவட்ட சைபர் கிரைமுக்கும், நாலாட்டின்புதூர் சுகாதேவி மூலைக்கரைப்பட்டிக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.

வீரகேரளம்புதூர் ராபர்ட் சிவந்திபட்டிக்கும், சிவந்திபட்டி ஹென்றி அமலதாஸ் தாழையூத்துக்கும், அச்சன்புதூர் கவிதா வீரவநல்லூருக்கும், தென்காசி அனைத்து மகளிர் காளீஸ்வரி சீதபற்பநல்லூருக்கும், புளியங்குடி அனைத்து மகளிர் மாரிசெல்வி தேவர்குளத்துக்கும், கொட்டிகோடு உமா திசையன்விளைக்கும், குமரி மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு பாலமுருகன் நெல்லை மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவுக்கும், ராஜாக்கள்மங்கலம் ராமர் வள்ளியூர் குற்றப்பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். கடம்பூர் அனைத்து மகளிர் கோகிலா மற்றும் தூத்துக்குடி குற்ற ஆவண காப்பகம் ஜெரால்டின் வினு ஆகிய 2 பேரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

நெல்லை மாநகர்

திசையன்விளை சீதாலட்சுமி சிறப்பு நுண்ணறிவு பிரிவுக்கும், சங்கரன்கோவில் டவுன் பாலமுருகன் நெல்லை சந்திப்புக்கும், தென்காசி குற்ற ஆவண காப்பம் சரஸ்வதி டவுன் காவல் நிலையத்துக்கும், குமரி எஸ்.டி.குளம் அருள் பிரகாஷ் பேட்டைக்கும், ஆழ்வார்திருநகரி அனிதா நெல்லை மாநகர சைபர் கிரைமுக்கும், ஏரல் பத்மநாமபிள்ளை தச்சநல்லூருக்கும், குற்றாலம் முத்து கணேஷ் பாளையங்கோட்டைக்கும், சங்கரன்கோவில் தாலுகா மனோகரன் ஐகிரவுண்டிற்கும், சாத்தான்குளம் அனைத்து மகளிர் நாககுமாரி பாளையங்கோட்டை அனைத்து மகளிருக்கும், புதூர் கபீர்தாசன் மேலப்பாளையம் குற்றப்பிரிவுக்கும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதுதவிர தென்காசி ஆயுதப்படை மார்ட்டின் நெல்லை மாநகரம் ஆயுதப்படை மோட்டார் போக்குவரத்துக்கும், தூத்துக்குடி ஆயுதப்படை சுனை முருகன் நெல்லை சந்திப்பு போக்குவரத்து பிரிவுக்கும், தென்காசி போக்குவரத்து எஸ்.எம்.மணி பாளையங்கோட்டை போக்குவரத்து பிரிவுக்கும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.




மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory