» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாசரேத்தில் மர்காஷிஸ் சபைமன்றத் தேர்தல்: எஸ்.டி.கே. அணியினர் 100 சதவீத வெற்றி!
சனி 13, டிசம்பர் 2025 5:26:12 PM (IST)

நாசரேத்தில் நடைபெற்ற கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபை மன்றத் தேர்தலில் எஸ்.டி.கே. அணியினர் அனைத்து பதவிகளையும் கைப்பற்றி 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளனர்.
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல்கள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த நிலையில் 4-வது கட்டமாக திருமண்டல செயற்குழு உறுப்பினர்கள், சபை மன்ற செயலாளர், ஆகியோரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று13ம் தேதி சனிக்கிழமை அனைத்து சபை மன்றங்களிலும் நடந்தது. இதில் கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபை மன்றத்தின் தேர்தல் இன்று காலை நாசரேத் சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து நடைபெற்றது.
இத் தேர்தலில் எஸ். டி.கே. அணி சார்பில் சபை மன்ற செயலாளராக கோயில்ராஜ், திருமண்டல செயற்குழு உறுப்பினர்களாக பெண்கள் பிரிவில் பியூலா ரத்தினம், 35 வயதிற்குட்பட்டவர் பிரிவில் மோசஸ் ராஜகுமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். பொதுப் பிரிவு செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் பத விக்கு எஸ்.டி.கே. அணி சார்பில் போட்டியிட்ட மாமல்லன் 194 ஓட்டுகளும், ஸ்டீபன் சாலமோன் 193 ஓட்டுகளும் பெற்று, தேர்தலில் வெற்றி பெற்றனர்.
மேலும் கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபை மன்றத்தில் இருந்து திருமண்டல பெரு மன்றத்திற்கு திருமண்டல ஊழியர்களுக்கான தேர்தலில் உயர்நிலை, மேல்நிலை மற்றும் சிறப்பு பள்ளிகளில் இருந்து கிரேஸ் சகாய ஷேபா, சாமுவேல் சுவாமிதாஸ், வேதமாணிக்கம் ஆகியோரும், நாசரேத் கலைக் கல்லூரியில் ராஜசிங் தவமணியும்,தொழில்நுட்ப மற்றும் பொறியியல் கல்லூரியில் ராஜேஷ், சுதாகர் சைமன்ராஜ், வினோதினி மேரிஆகியோரும், மருத்துவத்துறை மற்றும் நர்சிங் கல்லூரியில்ஐரின் நிஷானியும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதனால் நாசரேத்தில் நடைபெற்ற கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபை மன்றத் தேர்தலில் எஸ்.டி.கே. ராஜன் அணி சார்பில் போட்டியிட்ட அனைத்து பதவிகளையும் கைப்பற்றி, நூறு சதவீதம் வெற்றி பெற்றுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










