» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தில் 43,476 பேர் பயன் பெற்றுள்ளனர் : ஆட்சியர் தகவல்!

சனி 13, டிசம்பர் 2025 4:51:11 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 43,476 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்றுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார். 

அரசு வழங்கும் பல்வேறு சேவைகளை மக்களின் வீடுதேடிச் சென்றடையச் செய்யும் தமிழ்நாடு அரசின் உயரிய நோக்கின் அடுத்த கட்டமாக, தமிழ்நாட்டில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் "முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தண்டையார்பேட்டை, கோபால் நகரில் வைத்து 12.08.2025 அன்று தொடங்கி வைத்தார்.

65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 18 வயதிற்குட்பட்டவர்களை கொண்ட 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களையும் கொண்ட குடும்ப அட்டைதாரர்கள், ஒரு நபர் மாற்றுத்திறனாளிகளை கொண்ட குடும்ப அட்டைதாரர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட குடும்ப அட்டைதாரர்கள், மூன்றாம் நபரின் உதவி தேவைப்படும் குடும்ப அட்டைதாரர்கள் ஆகியோர் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் பயனாளர்கள் ஆவார்கள்.

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களின் விவரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையிடமிருந்து பெறப்பட்டு, கள அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, திருவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம், கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம், எட்டையபுரம், கயத்தார், ஏரல் ஆகிய 10 வட்டங்களிலும் கூட்டுறவுத்துறை சார்பாக கிராமப்புறங்களில் உள்ள 30,437 குடும்ப அட்டைகளும், நகர்புறங்களில் உள்ள 12,181 குடும்ப அட்டைகளும், இதர கூட்டுறவுத்துறை (பனை வெல்லம்) சார்பாக 823 குடும்ப அட்டைகளும், மகளிர் சுய உதவிக்குழுகான 35 குடும்ப அட்டைகள் என மொத்தம் 43,476 தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்றுள்ளனர்.

இத்திட்டத்தில் மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் குடிமைப் பொருட்களைப் பாதுகாப்பாகத் தகுதியுள்ள பயனாளர்களின் இல்லத்திற்கே சென்று நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் விநியோகிப்பர். திட்ட செயலாக்கத்திற்கான மொத்தம் 504 தொகுப்புகளும் (Clusters), 505 வாகனங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன மற்றும் 452 பணியாளர்கள் இத்திட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். 

இந்த சிறப்பான திட்டத்தின் மூலம் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று பொருட்கள் வழங்கும் சிறப்பான தாயுமானவர் திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பயனாளிகள் தங்களது நிறைந்த மனதுடன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





CSC Computer Education




Thoothukudi Business Directory