» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பாண்டியபதி தேர்மாறன் 273வது ஜெயந்தி விழா: அரசியல் கட்சியினர்

சனி 13, டிசம்பர் 2025 3:53:46 PM (IST)



தூத்துக்குடியில் முத்துகுளித்துறை 16ம் மாமன்னர் பாண்டியபதி தேர்மாறன் 273வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர். 

இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன், வெள்ளையத் தேவர் மற்றும் மருது சகோதரர்களுக்கு போரின் போது தேவையான ஆயுதங்களை தனது கப்பல் மூலம் சென்றடைய உதவிய இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் முத்துகுளித்துறையின் 16வது மாமன்னரும், தூத்துக்குடி பனிமய மாதா திருத்தளத்திற்கு தங்கத் தேர் வழங்கியவருமான பாண்டியபதி தேர்மாறனின் 273ம் ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி லசால் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள பாண்டியபதி நினைவிடத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழகச் செயலாளருமான எஸ்.பி சண்முகநாதன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர் கூறுகையில்,"பாண்டியபதி ஜெயந்தி விழாவை சிறப்பாக ஏற்பாடு செயத சமூதாய மக்களுக்கு நன்றியும் வாழ்த்தும் தெரிவித்துக் கொள்கிறேன். தூத்துக்குடி நகர தந்தை ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்து மணிமண்டபம் கட்ட சட்டமன்றத்தில்  அறிவித்து பெருமை சேர்த்தது கடந்த கால  அதிமுக அரசு, அதேபோல் 2026ல் மீண்டும் எடப்பாடியார்  தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்த உடன் சமூதாய மக்களின் கோரிக்கையை ஏற்று பாண்டியபதி தேர்மாறன் அவர்களின் ஜெயந்தி விழாவை அரசு விழாவாக அறிவித்து மணிமண்டபம் கட்டப்படும்.

மேலும், ஆட்சி மாற்றத்துக்கு பின் விளம்பர மாடல் திமுக அரசு வந்தவுடன் அந்த மணிமண்டபத்தை நகரின் மையப் பகுதியில் அமைக்காமல்  சுடுகாடு அமைந்துள்ள பகுதியில் அமைத்துள்ளது இதற்கு மீனவ மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்த உடன் தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் புதிதாக தூத்துக்குடி நகர தந்தை ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்திற்கு மணிமண்டபம் கட்டப்படும் என்றார்.

இந்நிகழ்வில் மாநில அமைப்புசாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவரும் மாவட்ட அமைப்புச் சாரா ஓட்டுநர் அணி செயலாளருமான இரா.சுதாகர், மாவட்ட கழக பொருளாளர் சேவியர், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், சிறுபாண்மை பிரிவு செயலாளர் கெ.ஜெ.பிரபாகர், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், பகுதி கழக செயலாளர்கள் முருகன், ஜெய்கணேஷ், சுடலைமணி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

சமத்துவ மக்கள் கழகம்

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை, நாடார் பேரவை மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இந்நிகழ்வில் தமிழக மீனவ மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் கோல்டன் பரதர் புரட்சிப் பாரதம் கட்சி மாவட்ட தலைவர் மாரிச்செல்வம் சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெயகசமாடன் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு. முத்துக்குமார் மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம் மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர் உள்பட பல்வேறு இயக்கத்தினர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital






Thoothukudi Business Directory