» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தெப்பக்குளம் விவகாரத்தில் ஆணையர் மீது நடவடிக்கை: டிஎஸ்பியிடம் பாஜக புகார்!

சனி 13, டிசம்பர் 2025 3:37:37 PM (IST)



தூத்துக்குடியில் சிவன் கோவில் தெப்பக்குளம் நடைபாதை இடிந்து விழுந்த சம்பவத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வழக்கறிஞர் பிரிவு தெற்கு மாவட்டத் தலைவர் க.ஸ்ரீனிவாசன் காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கு அளித்துள்ள மனுவில், "தூத்துக்குடி கிழக்கு மண்டலம் பகுதியில் உள்ள அருள்மிகு சிவன் கோவிலுக்குச் சொந்தமான பழமையான தெப்பக்குளத்தைச் சுற்றிலும் புதிதாக அமைக்கப்பட்ட பூங்கா நடைபாதையானது சில வாரங்களிலேயே இடிந்து விழுந்துள்ளது. 

அதிர்ஷ்டவசமாக, இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த நடைபாதையானது முறையான மண் பரிசோதனை மற்றும் பொறியாளர் ஆய்வு எதுவும் இன்றி, எந்தவித டெண்டர் அறிவிப்பும் இல்லாமல் ரூ.74 லட்சம் செலவில் தூத்துக்குடி மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ளது.

நடைபாதை கட்டுமானப் பணியைச் செய்த ஒப்பந்தக்காரர் இம்மானுவேல் என்பவர், தனது சொந்த தேவைக்காக மோட்டார் வைத்துத் தண்ணீரை உறிஞ்சி எடுத்ததால், மண் சரிவு ஏற்பட்டு நடைபாதை மொத்தமாக நொறுங்கியது. பல ஆயிரம் மக்கள் கலந்துகொள்ளும் தெப்பத்திருவிழா நடைபெற சில நாட்களே உள்ள நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது. 

திருவிழாவின்போது நடந்திருந்தால் பலர் உயிரிழந்திருக்க நேரிடும். தரமற்ற பணியைச் செய்யக் காரணமாக இருந்த தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மீதும், நீர்நிலை அருகிலிருந்தும் ஆய்வு செய்யாத பொறியாளர் மீதும், தரமில்லாமல் பணியைச் செய்த ஒப்பந்தக்காரர் இம்மானுவேல் மீதும் தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது

மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் சீனிவாசன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் வக்கீல் சின்னத்தம்பி பாண்டியன், மாவட்ட துணை தலைவர்கள் முத்துராமலிங்கம், சிவராமன், வழக்கறிஞர் பிரிவு முருகன், மோகன்தாஸ், சுரேஷ், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் கிஷோர், வக்கீல் முத்துக்குமார், சமூக ஊடக பிரிவு காளிராஜ், மருத்துவ பிரிவு பாலாஜி, தன்னார்வ தொண்டுபிரிவு முத்துக்குமார், ராஜா, ஓபிசி அணி வன்னியராஜ், சேர்மகுருமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டணர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education





Arputham Hospital



Thoothukudi Business Directory