» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தெப்பத்திருவிழாவிற்கு முன் குளத்தை சீரமைக்க வேண்டும் : முன்னாள் அமைச்சர் கோரிக்கை!

சனி 13, டிசம்பர் 2025 3:20:09 PM (IST)



தூத்துக்குடியில் தெப்பத்திருவிழாவிற்கு முன்பாக தெப்பகுளத்தை சீரமைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் வலியுறுத்தியுள்ளார். 

தூத்துக்குடி நகரின் மைப்பகுதியில் சிவன் கோவில் அருகே அமைந்துள்ள தூத்துக்குடி தெப்பகுளத்தில் மாநகராட்சி சார்பில் சுற்றுபுற நடைமேடை அமைக்கும் பணி நடைபெற்று முடிவடைந்த நிலையில் முழுமையாக நிரம்பி இருந்த தெப்பகுளத்தில் இருந்து நீரை வெளியேற்றியதின் விளைவாக தெப்பக்குளத்தின் சுற்று சுவர் 5 அடி வரை உள்வாங்கி மாநகாராட்சி அமைத்த நடைபாதைக்கும் தெப்பக்குளத்திற்கும் நடுவில் பெரும் பள்ளம் ஏற்பட்டது. 

இதனை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் பார்வையிட்டு கூறுகையில் தூத்துக்குடி நகருக்கென்று ஒரு தெப்பகுளம் தான் தற்போது உள்ளது பழமை வாய்ந்த இந்த தெப்பகுளத்தில் மாநகராட்சி சார்பில் நடைமேடை அமைப்பதாக கூறி எந்த வித திட்மிடலும் இல்லாமலும் அந்த இடத்தை பற்றி உரிய அதிகாரிகளின் ஆய்வறிக்கையும் இல்லமலும் 75 லட்சம் மதிப்பீட்டில் நடைமேடை அமைக்கும் பணி நடந்துள்ளது. 

இந்நிலையில் தெப்பக்குளத்தில் நிரம்பி இருந்த தண்ணீரை வெளியேற்றியதின் விளைவாக மண்ணறிப்பு ஏற்பட்டு தெப்பகுளம் சுற்று சுவர் முற்றிலும் உள்வாங்கி தற்போது பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. வரும் தை மாதம் தெப்பதிருவிழா நடைபெறவுள்ள நிலையில் இந்நிகழ்வு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, மாநகராட்சி நிர்வாகம் இந்த தெப்பகுளத்தில் உடனடியாக பணியை துவங்கி பழமை மாராமல் மேலும், இது போன்ற பிரச்சனைகள் வராத வண்ணம் தகுந்த பாதுகாப்பு அம்சங்களோடு தெப்பத்திருவிழாவிற்கு முன் குளத்தை சீரமைத்து தர வேண்டும் என்றார்..

இந்நிகழ்வின் போது மாநில அமைப்புசாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவரும் மாவட்ட அமைப்புச் சாரா ஓட்டுநர் அணி செயலாளருமான இரா.சுதாகர், மாவட்ட கழக பொருளாளர் சேவியர், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், சிறுபாண்மை பிரிவு செயலாளர் கெ.ஜெ.பிரபாகர்  உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory