» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
லாரிகள் மோதி விபத்து: டிரைவர் உயிரிழப்பு!
சனி 13, டிசம்பர் 2025 8:56:07 AM (IST)
கோவில்பட்டி அருகே லாரி மீது மினி கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், தெனவிளை, வில்லுக்குறியைச் சேர்ந்தவர் தேவராஜ் மகன் ராபர்ட் (46), லாரி ஓட்டுநர். இவர், அருப்புக்கோட்டையில் இருந்து லாரியில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் இடைச்செவல், பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த மினி கண்டெய்னர் லாரி மோதியது.
இதில், லாரி சாலையின் தடுப்புச் சுவரைத் தாண்டி அணுகு சாலை அருகேயுள்ள ஓடையில் கவிழ்ந்தது. இதில், திருவள்ளூர் மாவட்டம், போரூர், காரம்பாக்கம், அருணாச்சல முதல் தெருவைச் சேர்ந்த மினி கண்டெய்னர் லாரி ஓட்டுநர் சு. துரைராஜ் (48) பலத்த காயமடைந்தார்.
அருகிலிருந்தவர்கள், அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










