» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதல்வர் என்று கூறுகிறார்கள் : தொல்.திருமாவளவன்

சனி 13, டிசம்பர் 2025 8:50:49 AM (IST)



எந்த அரசியல் பணியோ, அடிப்படை பணியோ தெரியாமல், இன்று சிலர் கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதல்வர் என்று கூறி வருகின்றனர் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியின் 12-ஆவது மாநில மாநாடு தூத்துக்குடியில் நேற்று தொடங்கியது. மூன்று நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது: கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமன்றி அனைத்துக் கட்சிகளையும் இடதுசாரிமயமாக்க வேண்டும். அம்பேத்கர் இயக்கங்களை வெறும் சாதி சங்கங்களாக காணாமல் அவற்றை இடதுசாரிமயமாக்க வேண்டும்.

பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதற்காக அதிமுகவை புறக்கணித்துவிடக் கூடாது. அந்தக் கட்சியும் இடசாரி அரசியலை அடிப்படையாக கொண்டு பெரியார் கொள்கையுடன் உருவான இயக்கமாகதான் நாம் அணுக வேண்டும். இன்று சிலர் கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதல்வர் என்று கூறி வருகின்றனர். அத்தகையவர்களுக்கு எந்த அரசியல் பணியோ, அடிப்படை பணியோ தெரியவில்லை. ஆளும் திமுக அரசு மீதும், அக்கட்சி மீதும் எங்களுக்கும் விமர்சனங்கள் உண்டு. எனினும் கூட்டணியை, உறவை, நட்பை நாங்கள் போற்றுகிறோம்.  வலதுசாரிகளுக்கு துணைபோகிற கும்பலை ஆதரிக்க முடியாது. இடதுசாரிகள் அனைவரும் இணைந்து நிற்போம் என்றார்.

மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் திபங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலச் செயலர் திருச்சி செழியன், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் பாலசுந்தரம், சோ.பாலசுப்பிரமணியன், அ.சந்திரமோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



CSC Computer Education



Thoothukudi Business Directory