» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிவன் கோவிலில் ஸ்ரீ மஹாதேவாஷ்டமி வைபவம் : திரளான பக்தர்கள் தரிசனம்
வெள்ளி 12, டிசம்பர் 2025 3:58:19 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் ஸ்ரீ மஹாதேவாஷ்டமி வைபவம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடியில் உள்ள அருள்மிகு ஸ்ரீபாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் ஸ்ரீ மஹாதேவாஷ்டமி வைபவம் இன்று காலை நடைபெற்றது. அஷ்டமியில் பைரவரை வணங்குவது இன்னும் விசேஷம். அதிலும் கார்த்திகை மாதத்தின் அஷ்டமி மகாதேவாஷ்டமி என்றும் பைரவாஷ்டமி என்றும் போற்றப்படுகிறது. இதையொட்டி டிச.11 மற்றும் 12ஆம் தேதிகளில் மங்கள வாத்தியம், சொற்பொழிவு, மற்றும் பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
இன்று வெள்ளிக்கிழமை காலை 7.00 மணிக்கு மேல் சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், ஏகாதச ருத்ர பாராயணம், 8.00 மணிக்கு மேல் மூல மந்த்ர ஹோமம், திரவ்யாகுதி, வஸ்திராகுதி வஸோத்தாரா, மகா பூர்ணாகுதி, தீபாராதனை சுவாமி அம்பாள், பைரவர் மகாபிஷேகம், கலசாபிஷேகம், பஞ்சமுகார்ச்சனை, பிற்பகல் 12.30 மணிக்கு மேல் மகா தீபாராதனை நடைபெற்றது.

பூஜைகளை சிவன் கோவில் பிரதான பட்டர் செல்வம் நடத்தினார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










