» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் விருது வழங்கும் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:17:43 PM (IST)

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியின் (தன்னாட்சி) தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு பிரிவு சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுதல் மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் தலைமைப் பொறியாளர் ஜான் டால்டன் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். முதல்வர் அருட்சகோதரி ஜெஸி பெர்னாண்டோ தலைமை உரையாற்றி போட்டித் தேர்வுகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். கின்ஸ் அகாடமியின் நிறுவனர் எஸ். பேச்சிமுத்துவின் அயராத சேவையை அங்கீகரிக்கும் வகையில் கல்லூரி சார்பில் கல்வி சேவகர் விருது வழங்கப்பட்டது.
வர்சவ் அகாடமி, கின்ஸ் அகாடமி மற்றும் கணேஷ் ஐஏஎஸ் அகாடமியுடன் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. போட்டித் தேர்வுகளுக்கான நேர மேலாண்மை திறன்கள் குறித்த தனது கருத்துக்களை தலைமை விருந்தினர் பகிர்ந்து கொண்டார். மேலும், போட்டி தேர்வர்கள், வெற்றிக்காக தங்களைத் தாங்களே ஊக்குவிக்க வேண்டும் என்றும், போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு இணையத்தை நன்முறையில் பயன்படுத்துமாறும் அவர் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
மூன்று அகாடமிகளின் நிறுவனர்கள் தங்கள் அகாடமிகளில் மாணவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பற்றிப் பேசிய பின் நிகழ்ச்சி நிறைவுற்றது. நிகழ்ச்சியை தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியருமான ஏ.எம்.சோனல் மற்றும் குழு உறுப்பினர்கள் ஒருங்கிணைந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










