» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் : இந்து முன்னணி கோரிக்கை!

வியாழன் 11, டிசம்பர் 2025 5:54:56 PM (IST)



தூத்துக்குடியில் திடீரென சிதலமடைந்த தெப்பக்குளத்தை நீர் மேலாண்மை மற்றும் பொதுப்பணித்துறை பொறியியல் தொழில்நுட்ப வல்லுனர்களை வைத்து உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு இந்து முன்னணி மாநகர் மாவட்ட தலைவர் இசக்கிமுத்து குமார் அனுப்பியுள்ள மனுவில், "தூத்துக்குடி மாநகருக்கு திருமந்திர நகர் எனும் மற்றொரு பெயரும் உண்டு. இந்த திருமந்திர நகரில் இந்த இடத்தில் தான் சிவன் கோவில் அமைய வேண்டும், இந்த இடத்தில் தான் தெப்பக்குளம் அமைய வேண்டும் என பல ஆண்டுகளுக்கு முன்பு திருக்கோவில் அமைத்து அதன் அருகாமையில் 1881 ம் ஆண்டு தெப்பக்குளமும் அமைத்த தமிழனின் பெருமையும், தூத்துக்குடி மாநகரின் புராதான அடையாளமாக சிவன் கோவில் தெருவில் தெப்பக்குளம் அமைந்துள்ளது.

தெப்பக்குளம் 1996ஆம் ஆண்டு சீரமைக்கப்பட்டது. இந்த தெப்பக்குளத்தில் தான் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிறப்பிக்கும் தெப்பத் திருவிழா ஆண்டுதோறும் சீரோடும் சிறப்போடும் நடத்தப்பட்டு வருகிறது. வருகின்ற பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி தைப்பூசத் தினத்தன்று தைப்பூச உறச்சவ விழா விமர்சையாக நடைபெற இருக்கிறது. இந்நிலையில் 10.12.2025 அன்று தூத்துக்குடி தெப்பக்குளத்தின் வெளிப்புறச் சுற்று சுவர்களும் அதில் மாநகராட்சியின் சார்பில் தற்போது ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட நடை மேடையும் திடீரென சுமார் பத்து அடிக்கு பள்ளம் விழுந்தும் தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவர் உள்வாங்கியும் அபாய கட்டத்தில் உள்ளது. 

தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலின் அடையாளமாகவும் இந்து மதத்தின் பெருமைமிகு அடையாளமாகவும் திகழும் தெப்பகுளத்தை சீரமைக்கும் பொருட்டு நீர் மேலாண்மை வல்லுநர்களையும், பொதுப்பணித்துறை பொறியியல் தொழில்நுட்ப வல்லுநர்களையும் அழைத்து ஆய்வு செய்து உடனடியாக சிதலமடைந்த தெப்பக்குளத்தின் சுற்றுச்சூழலை சீர் செய்து பாரம்பரியமிக்க தெப்பக்குளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



CSC Computer Education



Thoothukudi Business Directory