» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கனிமவள கொள்ளை, ஆக்கிரமிப்புகளை தடுக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்!

வியாழன் 11, டிசம்பர் 2025 4:54:50 PM (IST)



கனிமவள கொள்ளை, கோவில் சொத்துக்கள் அபகரிப்பை தடுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் தமிழ் பேரரசு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கோவில்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் சாலை, நீர்நிலை, அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டும், வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெறும் பணிகள் குறித்து மாதம் ஒரு முறை நேரில் ஆய்வு செய்ய வேண்டும், அரசு நூலகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும், தனியார் சந்தை வழக்கு, இளையரசனேந்தல் சேவை சாலை வழக்கு ஆகியவற்றை அரசு சார்பில் விரைந்து நடத்தி முடிக்க வேண்டும், கனிமவள கொள்ளை, கோவில் சொத்துக்கள் அபகரிக்கப்படுவதை தடுக்க வலியுறுத்தி கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு தமிழ் பேரரசு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் வழக்கறிஞர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மு.கணேசன், மாவட்ட வழக்கறிஞரணி செயலாளர் லட்சுமணபாண்டியன், இளைஞரணி செயலாளர் இசக்கிமுத்து, மாவட்ட பொருளாளர் குமார், குருநாதன் மற்றும் சமூக ஆர்வலர்கள் ராஜேசு கண்ணா, பரமசிவம், சுதாகர், பால்ராஜ், ராஜா, ராஜசிம்மன், முருகன், விவசாய அணி தலைவர் அருமைராஜ், நாம் தமிழர் கட்சி காமநாயக்கன்பட்டி பொறுப்பாளர் ஆரோக்கியராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education






Arputham Hospital



Thoothukudi Business Directory