» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம்: டிச.13ல் செயற்குழு உறுப்பினர் தேர்தல்!

வியாழன் 11, டிசம்பர் 2025 4:02:26 PM (IST)

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தில் நான்காவது கட்டமாக 6 சபை மன்றங்களில் வைத்து திருமண்டல செயற்குழு உறுப்பினர்கள் தேர்தல் வருகிற 13ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது.

கடந்த 27.10.2025 தேதியிட்ட சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை பெஞ்ச் உத்தரவின்படி தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல நிர் வாகியாக மீண்டும் நீதிபதி ஜோதி மணி பொறுப்பேற்று தேர்தல்களை கடந்த 3.9.2025 அன்று விட்ட இடத்தில் இருந்து தொடர வேண்டும் என்ற உயர்நீதி மன்ற உத்தரவின் அடிப்படையில், புதிய தேர்தல் அட்டவணையை வெளியிட்டார். 

அதன்படி, முதல் மூன்று கட்டங்களாக தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில் நான்காம் கட்டமாக தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல சபைமன்ற நிர்வாகிகளுக்கான தேர்தல் 13 ந் தேதி சனிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு 6 சபைமன்றங்களிலும் நடைபெறுகிறது.

கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபை மன்றத்தின் தேர்தல் அதிகாரியும் சபைமன்றத் தலைவமான ஏசுவடியான் துரைச்சாமி தலைமையில் நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்தும்,இராக்லாண்ட் சபை மன்றத்தின் தேர்தல் அதிகாரியும் சபைமன்றத் தலைவருமான தேவராஜன் தலைமையில் கே.கைலாசபுரத்தில் வைத்தும், 

பேராயர் இராபர்ட் கால்டுவெல் சபை மன்றத்தின் தேர்தல் அதிகாரியும் சபைமன்றத் தலைவருமாகி குரோவ்ஸ் பர்னபாஸ் தலைமையில் பிரையண்ட்நகரில் வைத்தும், டாக்டர் ஜி.யு. போப் சபைமன்றத்தின் தேர்தல் அதிகாரியும் சபைமன்றத் தலைவருமாகிய பிரின்ஸ் குமார் தலைமையில் சேர்வைக்காரன்மடத்தில் வைத்தும்,

சுவிஷேசகர் தாவீது சுந்தரானந்தனார் சபைமன்றத்தின் தேர்தல் அதிகாரியும் சபைமன்றத் தலைவருமாகிய செல்வன் மகாராஜா தலைமையில் முதலூரில் வைத்தும், ஜாண் தாமஸ் சபை மன்றத்தின் தேர்தல் அதிகாரியும், சபைமன்றத் தலைவருமாகிய டேனியல் ஞானப்பிரகாசம் தலைமையில் கிறிஸ்டியான்நகரத்தில் வைத்தும் இச் சபைமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் சபைமன்ற செயலர், திருமண்டல செயற்குழு உறுப்பினர்கள் தேர்தல், சேகர மற்றும் திருமண்டல ஊழியர்களுக்கான திருமண்டல பெறுமன்ற பிரதிநிதிகள் தேர்தல் மற்றும் நிலைவர குழுக்களுக்கான தேர்தல்கள் நடைபெறுகிறது.

இறுதி கட்டமாக டிசம்பர் 30, 31 ஆகிய தேதிகளில் நாசரேத்தில் வைத்து திருமண்டல பெருமன்ற கூட்டம் நடைபெறுகிறது. இதில் தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல நிர்வாகிகளான உபதலைவர், லே செயலர், குருத்துவ காரியதரிசி, திருமண்டல பொருளாளர் ஆகியோருக்கான தேர்தல்கள் நடைபெறுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education



Arputham Hospital





Thoothukudi Business Directory