» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மேல்மருவத்தூர் தைப்பூச இருமுடி விழா: செவ்வாடை பக்தர்கள் சக்தி மாலை அணிந்து விரதம் தொடக்கம்!

வியாழன் 11, டிசம்பர் 2025 3:51:55 PM (IST)



மேல்மருவத்தூர் தைப்பூச இருமுடி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட செவ்வாடை பக்தர்கள் சக்தி மாலை அணிந்து விரதத்தை துவக்கினர்.

மேல்மருவத்தூர் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அம்மா அவர்களின் அருளாசியுடன் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச இருமுடி விழா டிசம்பர் 15ம் தேதி தொடங்கி ஜனவரி மாதம் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. தைப்பூச இருமுடி விழாவில் கலந்துகொள்ள தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள், சக்தி பீடங்களில் இருந்து செவ்வாடை பக்தர்கள் சக்தி மாலை அணிந்து விரதமிருந்து இருமுடி கட்டிச்செல்லும் நிகழ்ச்சி தொடங்கியது.

சக்தி மாலை இரு முடி விழா கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆன்மிக இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்திமுருகன் தொடங்கிவைத்தார்.கோவில்பட்டி, தூத்துக்குடி, பிள்ளையார்நத்தம், எம்.ஜி.ஆர்.நகர், இந்திராநகர், தளவாய்புரம், ஆசூர், கழுகுமலை, விளாத்திகுளம், நாகலாபுரம், திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், உட்பட மாவட்டம் முழுவதும் சக்தி மாலை அணியும் நிகழ்ச்சி தொடங்கியது. 

சக்தி மாலை இருமுடிகட்டிச் செல்லவிரும்பும் பக்தர்கள் தங்களுக்கு அருகில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் / சக்தி பீடங்களை தொடர்புகொள்ளலாம். இருமுடி பக்தர்களின் வசதிக்காக அதிவேக இரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்ல தெற்கு இரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.



இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை கண் டாக்டர். உமா, ஆன்மிக இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் பத்மாவதி, செல்வி, கோவில்பட்டி மன்ற தலைவர் அப்பாசாமி, இந்திராநகர் அழகு மாணிக்கம், பேச்சியம்மாள், சித்த மருத்துவர் வேம்பு கிருஷ்ணன், மகளிர் நிர்வாகிகள் கற்பகவள்ளி, காசியம்மாள், ராதா உட்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education








Thoothukudi Business Directory