» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம்: 530 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது!
திங்கள் 3, நவம்பர் 2025 3:54:12 PM (IST)

தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, கலைஞரின் கனவு இல்லம், தொழில் கடனுதவி, முதியோர், விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 530 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்கள். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 37 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, மக்கள் குறை களையும் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் கருணை அடிப்படையில் 1 அலுவலக உதவியாளர் மற்றும் 2 கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணையினை ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம், தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தமிழரசி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்மநாயகம், துணை ஆட்சியர் (பயிற்சி) மகேந்திரன் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாத்தான்குளம் பள்ளியில் தேசிய இரட்டையர்கள் தினம்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:05:40 AM (IST)

காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய முதலீடு மாசோதாவை எதிர்த்து வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:00:23 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி வாகன காப்பகத்தில் பைக் திருட்டு : மர்ம நபர் கைவரிசை
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:33:13 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:16:07 AM (IST)

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)











சண்முகம்Nov 8, 2025 - 08:38:28 AM | Posted IP 104.2*****