» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தனியார் ஊழியரிடம் செல்போன், பணம் பறிப்பு : தூத்துக்குடியில் மர்ம நபர்கள் கைவரிசை!
திங்கள் 3, நவம்பர் 2025 3:47:54 PM (IST)
தூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியரை தாக்கி செல்போன் மற்றும் பணத்தை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி தாளமுத்து நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால் மகன் பாஸ்கர் (51), இவலட ஏபிசி மகாலட்சுமி கல்லூரி எதிர்ப்புறம் உள்ள தனியார் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பணிபுரிந்து வருகின்றார். இன்று இரவு வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை வழிமறித்து கைகளால் தாக்கி அவரிடம் இருந்த மணி பர்சையும் அதிலிருந்த 1500 பணம் மற்றும் செல்போனையும் பறித்துச் சென்றுள்ளனர். இதில் காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாத்தான்குளம் பள்ளியில் தேசிய இரட்டையர்கள் தினம்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:05:40 AM (IST)

காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய முதலீடு மாசோதாவை எதிர்த்து வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:00:23 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி வாகன காப்பகத்தில் பைக் திருட்டு : மர்ம நபர் கைவரிசை
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:33:13 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:16:07 AM (IST)

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)










