» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஏழு தலைமுறைத் துயரத்துக்கு நிரந்தர முற்றுப்புள்ளி : ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை!

திங்கள் 3, நவம்பர் 2025 3:39:24 PM (IST)



திருவைகுண்டம் அருகே ஏழு தலைமுறைகளாக நீடிக்கும் சுடுகாடு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் அளித்த மனுவில், "திருவைகுண்டம் தாலுகாவில் உள்ள கீழ்பிடாகை வரதராஜபுரம் மற்றும் திருபுளியங்குடி ஆகிய இரண்டு ஊராட்சிப் பிரிவுகளைச் சேர்ந்த நளன்குடி (இசக்கியம்மன்புரம்) மற்றும் சுந்தரபாண்டியபுரம் கிராம மக்களுக்கும் தனி சுடுகாட்டுக்கான (இடுகாடு) நிலம் ஒதுக்கப்படவில்லை. 

இடமின்மை காரணமாக, இறந்த உடலின் மேலே மீண்டும் இறந்த உடலை புதைக்கும் அதிர்ச்சியூட்டும் அவலம் நீடிக்கிறது. இது இறந்தவர்களின் கண்ணியத்தை சிதைப்பதுடன், எங்கள் ஓட்டுமொத்த மக்களின் மன அமைதிக்கும், பொது சுகாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலை அளிக்கிறது. 

இதுகுறித்து பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனுக்கள் அளிக்கப்பட்டும், அரசியல் கட்சிகளால் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டும் இன்று வரை எந்தவிதமான தீர்வும் கிடைக்கவில்லை. எனவே, இந்த ஏழு தலைமுறைத் துயரத்துக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கிராம மக்களுக்குப் போதுமான அளவு சுடுகாட்டுக்கான நிலத்தை உடனடியாக ஒதுக்கீடு செய்து ஆணை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




CSC Computer Education




Thoothukudi Business Directory