» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மின்வாரிய டவர் மீது ஏறி மாற்றுத்திறனாளி வாலிபர் தற்கொலை மிரட்டல்
திங்கள் 3, நவம்பர் 2025 3:10:16 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளி வாலிபர் மின்வாரிய டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் தாலுகா கீழநம்பிபுரம், கீழத்தெருவைச் பரமசிவன் மகன் முனியசாமி (30), கண்பார்வை தெரியாத மாற்றுத்திறனாளி. இவர் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான செல்போன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் விரக்தியில் இருந்த அவர், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்துள்ளார். அப்போது அவர், ஆட்சியர் அலுவலகத்தின் பின்பகுதியில் ஆர்டிஓ அலுவலகம் அருகில் சுமார் 200 மீட்டர் தொலைவில் காட்டுப்பகுதியில் அமைந்துள்ள டிடிபிஎஸ் முதல் கயத்தாறு வரை செல்லும் 230 கேவி உயர் மின்னழுத்த கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து புதியம்புத்தூர் காவல் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி மற்றும் சிப்காட் உதவி ஆய்வாளர் ரத்தினவேல் பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்தில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் கீழே இறங்க மறுத்ததால் உதவி ஆய்வாளர் ரத்தினவேல் பாண்டியன் டவரில் ஏறி அவரை மீட்டு கீழே அழைத்து வந்தார். பின்னர் அவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க அழைத்துச் செல்லப்பட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாத்தான்குளம் பள்ளியில் தேசிய இரட்டையர்கள் தினம்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:05:40 AM (IST)

காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய முதலீடு மாசோதாவை எதிர்த்து வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:00:23 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி வாகன காப்பகத்தில் பைக் திருட்டு : மர்ம நபர் கைவரிசை
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:33:13 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:16:07 AM (IST)

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)










