» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திரைப்படத்திற்கு கதை தான் முக்கியம், பட்ஜெட் அல்ல: இயக்குனர் கலையரசன் பேட்டி!

திங்கள் 3, நவம்பர் 2025 11:43:30 AM (IST)



சிறிய பட்ஜெட், பெரிய பட்ஜெட் படம் என்பது முக்கிமில்லை. திரைப்படத்திற்கு கதை தான் முக்கியம் என்று ஆண்பாவம் பொல்லாதது திரைப்பட இயக்குனர் கலையரசன் தங்கவேல் கூறினார். 

தமிழகத்தில் திரையரங்கில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஆண் பாவம் பொல்லாதது திரைப்பட பிரமோஷன் நிகழ்ச்சி தூத்துக்குடியில் உள்ள பெரிசன் திரையரங்கில் நடைபெற்றது. படத்தின் இயக்குனர் கலையரசன் தங்கவேல், நடிகர் ரியோ, ஆர்ஜே விக்னேஷ் காந்த், வினோத்,ஜெய்சன் திவாகர் ஆகியோர் வந்திருந்தனர். 

இவர்களுக்கு பெரிசன் திரையரங்கு உரிமையாளர் அச்சை பெரிசன் டேவிஸ் மற்றும் ரசிகர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து படக்குழுவினர் கலந்துரையாடினர். இதைத்தொடர்ந்து இயக்குனர் கலையரசன் தங்கவேல் மற்றும் நடிகர் ரியோ ஆர் ஜே விக்னேஷ் காந்த் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் பேசும் போது, "இந்தப் படத்திற்கு தேவையானதை தயாரிப்பாளர் செய்து கொடுத்தார். சின்ன பட்ஜெட் பெரிய பட்ஜெட் என்று இல்லை இந்த கதைக்கு தேவையானது கிடைத்த பட்ஜெட்டை நான் நன்றாக பயன்படுத்தி உள்ளேன். இவ்வாறு சிறிய பட்ஜெட் படங்கள் வெற்றி பெறுவது ஆரோக்கியமான விஷயம் இதுபோன்று நிறைய இயக்குனர்கள் வரவேண்டும வந்தால் நன்றாக இருக்கும் வசூலும் நன்றாக இருக்கும். எல்லாரும் நன்றாக இருப்பார்கள். 

ரசிகர்கள் கொடுத்துள்ள ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது அடுத்ததாக கதை எழுதிக் கொண்டிருக்கிறேன் விரைவில் படம் எடுப்பேன். சின்ன ஹீரோ பெரிய ஹீரோ என்று பாகுபாடு இல்லை கதைக்கு தேவைப்பட்ட எனக்கும் ரியோ ஹீரோ ஹீரோவாக தேவைப்பட்டார் அவருக்கும் இந்த கதை தேவைப்பட்டது சின்ன ஹீரோ பெரிய ஹீரோ என்று இல்லை எனக்கு ரியோ பெரிய ஹீரோதான். இந்த கதைக்கு பொருத்தமான நடிகர் ரியோ தான். 

அதனால் அவரை தாண்டி வேறு எங்கும் போகவில்லை. முதலில் திரைப்படத்திற்கு கதை தான் முக்கியம். திரைத்துறைக்கு இன்னும் பல புதிய இயக்குனர்கள் வரவேண்டும். புதிய கதைகள் வரவேண்டும் அப்பொழுதுதான் சினிமாத்துறை நன்றாக இருக்கும். விஜய் அரசியலுக்கு வருவது பற்றி தனக்கு எதுவும் தெரியாது படத்தை பற்றி மட்டும் கேளுங்கள். 

ஆண்பாவம் பொல்லாதது பட பிரமோஷனுக்காக கோயம்புத்தூரில் இருந்து ஆரம்பித்து இன்று தூத்துக்குடியில் இரவு காட்சியில் இவ்வளவு ரசிகர்கள் கூட்டம் இருப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது. தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது.

படம் சின்ன பட்ஜெட் படம் பெரிய பட்ஜெட் படம் என்பது ரசிகர்களுக்கு கிடையாது. படம் பொழுதுபோக்காக உள்ளதா என்பதுதான் ரசிகர்களின் விருப்பம். நடிகர் அஜித் திரையரங்குக்கு சென்று மக்கள் படம் பார்க்க வேண்டும் என்று கூறிய கருத்து நல்ல கருத்து அதை வரவேற்கிறோம். சினிமா என்பது செலிப்ரேட் பண்ணுவது கொண்டாடுவது சரியான முறையில் கொண்டாடுங்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார் 

திரையரங்கு மட்டுமில்லாமல் எங்கேயும் வன்முறை வேண்டாம் என்பதுதான் அனைவரும் சொல்கிறோம். இந்த வருடம் நிறைய படங்கள் குடும்பஸ்தன் டூரிஸ்ட் ஃபேமிலி டிராகன் உள்ளிட்ட பல்வேறு படங்கள் நன்றாக சென்றுள்ளது குடும்பங்களாக வந்து படம் பார்ப்பது என்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital







Thoothukudi Business Directory