» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பிள்ளைகளுக்கு ரேஸ் பைக் வாங்கி கொடுக்க வேண்டாம் : டிஎஸ்பி வேண்டுகோள்
திங்கள் 3, நவம்பர் 2025 11:23:40 AM (IST)

பிள்ளைகளுக்கு ஆசையாக ரேஸ் பைக் கேட்டால் வாங்கி கொடுக்காதீர்கள் என சாத்தான்குளம் அருகே நடந்த விழாவில் டிஎஸ்பி ஆவுடையப்பன், பெற்றோருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தென்பதி விவசாய சங்கம் சார்பில் நீர் வாழ்வாதாரம் நீர்வழிப் பாதைகளில் குப்பைகள் மற்றும் கழிவுகள் கழிவு நீர்களை கலக்காமல் இருப்பதற்கான விழிப்புணர்வு முகாம் மற்றும் 5 பள்ளி குழந்தைகளுக்கான 12ம் வகுப்பு வரை கல்வித்தொகை வழங்கியும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சாத்தான்குளம் அருகே உள்ள அன்பின் நகரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவை அன்பின்நகரம் சேகரகுரு ஜெபராஜா ஜெபித்து தொடங்கி வைத்தார். சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்க தலைவர் லூர்துமணி தலைமை வகித்தார். அன்பின் நகரம் ஜேம்ஸ் அகஸ்டின், சங்க துணைத்தலைவர் ரவிச்சந்திரன், சங்க செயலர் பெரியசாமி, இயற்கை விவசாயி செந்தில், தமிழக விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தூத்துக்குடி மாவட்ட செயலார் அன்னகணேசன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தூத்துக்குடி மாவட்ட துணை தலைவர் சகாய சீலன் முன்னிலை வகித்தனர். அன்பின்நகரம் ஊர்த்தலைவர் நீலமேகம்எட்வின் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக சாத்தான்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் ஆவுடையப்பன் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு வரை படிக்க கல்விதொகை உள்ளிட்ட நல உதவிகளை வழங்கி பேசினார். அப்போது இந்த விவசாயிகள் விழாவில் பங்கேற்பதில் பெருமை கொள்கிறேன். சாத்தான்குளம் பகுதியில் போதை பொருளான கஞ்சா விற்கப்படுவதாக புகார் தெரிவித்தார்கள். போதை பொருள்கள் விற்கப்படுவதை தடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. போதை பொருள்கள் விற்பவர்கள் தெரியவந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பிள்ளைகள் ரேஸ் பைக் போன்ற விலை உயர்ந்த பைக் கேட்டால் பெற்றோருக்கு வாங்கி கொடுக்காதீர்கள். அந்த பைக் மூலம் வேகமாக சென்று விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டால் வருத்தம் தரும் வகையில் அமைகிறது. குழந்தைகள் பைக் கேட்டால் வேலைக்கு சென்று அதன் மூலம் வாங்குங்கள் என அறிவுரை கூறுங்கள் என்றார்.
விழாவில் முருங்கை ஏற்றுமதி விவசாயி.மணிகண்டன், முதலூர் சுந்தர், கொம்மடிக்கோட்டை விவசாய சங்கத் தலைவர் சிவனேசன், மெஞ்ஞானபுரம் சுற்றுவட்டார விவசாயிகள் முன்னேற்ற சங்க செயலர் ஜெகதீசன் ஆகியோர் விவசாயிகள் குறித்தும், விழிப்புணர்வு குறித்து பேசினர். இதில் அதிசயபுரம் உதயமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலர் பாலசுப்பிரமணியன். தூத்துக்குடி மாவட்ட செயலர் சௌந்தர பாண்டியன், மெஞ்ஞானபுரம் சுற்றுவட்டார விவசாயிகள் முன்னேற்ற சங்க தலைவர் டேனியல்ஜெபராஜ், சாத்தான்குளம் தென்பகுதி விவசாயி சங்க செயற்குழு உறுப்பினர்கள் சரவணபாண்டி, அருள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாத்தான்குளம் பள்ளியில் தேசிய இரட்டையர்கள் தினம்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:05:40 AM (IST)

காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய முதலீடு மாசோதாவை எதிர்த்து வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:00:23 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி வாகன காப்பகத்தில் பைக் திருட்டு : மர்ம நபர் கைவரிசை
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:33:13 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:16:07 AM (IST)

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)










