» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து த.வெ.க. அறவழி போராட்டம்!
திங்கள் 3, நவம்பர் 2025 11:00:37 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மக்களுடன் இணைந்து, அறவழிப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தமிழக வெற்றிக்கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் விடுத்துள்ள அறிக்கை; தூத்துக்குடி மாநகராட்சி 49-வது வார்டுக்குட்பட்ட அமுதா நகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி நிதி மூலம் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணி முழுமையடையாத வண்ணம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் அப்பகுதி மக்கள் வீடுகளுக்குள் செல்லும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மழைக்காலங்களில் அமுதா நகர் அருகே உள்ள கால்டுவெல் காலனி, 3-சென்ட் போன்ற பகுதிகளில் தேங்கிய மழைநீரோ அல்லது வெள்ளநீரோ இப்பகுதி பாதாள சாக்கடை வழியாகத்தான் வெளியேறும் நிலையும் உள்ளது. மேலும் அப்பகுதியில் அமைக்கப்படும் பாதாள சாக்கடை கீழ்ப்பகுதியில் மாநகராட்சி குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் ஏதோ பெயருக்கு மக்கள் பணி செய்யாமல் அப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு முறையாக பாதாள சாக்கடை அமைத்து அனைத்து பணிகளையும் விரைவில் சீரமைத்து, நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கின்றோம்.
இப்பிரச்சனைக்கு முறையான நடவடிக்கை எடுக்காமல் தவறும் பட்சத்தில், எங்கள் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில், அப்பகுதி மக்களை திரட்டி அறவழிப் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாத்தான்குளம் பள்ளியில் தேசிய இரட்டையர்கள் தினம்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:05:40 AM (IST)

காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய முதலீடு மாசோதாவை எதிர்த்து வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:00:23 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி வாகன காப்பகத்தில் பைக் திருட்டு : மர்ம நபர் கைவரிசை
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:33:13 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:16:07 AM (IST)

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)










