» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவில் குறித்து புகார் தெரிவித்த பாஜக பிரமுகர் கைது: பா.ஜ.கவினர் ஆறுதல்!
திங்கள் 22, செப்டம்பர் 2025 12:37:30 PM (IST)

திருச்செந்தூர் கோவில் சீர்கேடுகளை வெளிப்படுத்தியதால் கைதான பாஜக பிரமுகருக்கு கட்சி நிர்வாகிகள் ஆறுதல் தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் முருகன் கோவிலில் பக்தர்களிடம் பணம் பெற்று கொண்டு, கோவில் சண்முகவிலாசம் மண்டபம் வழியாக கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதுதொடர்பாக, கோவில் உள்துறை கண்காணிப்பாளர் ராமமூர்த்தி திருச்செந்துார் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் திருச்செந்துாரை சேர்ந்த இந்து முன்னணி நகர துணை தலைவர் செந்தில்குமார், மணிகண்டன், பிரித்திவிராஜ் ஆகிய மூவர் மீது வழக்கு பதிந்தனர். இந்நிலையில், திருச்செந்தூர் கோவில் சீர்கேடுகளை வெளிப்படுத்திய பாஜக பிரமுகர் செந்தில் குமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாஜக மாநில விவசாய அணி செயலாளர் சிவமுருகன் ஆதித்தன் மற்றும் நிர்வாகிகள் செந்தில்குமார் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாத்தான்குளம் பள்ளியில் தேசிய இரட்டையர்கள் தினம்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:05:40 AM (IST)

காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய முதலீடு மாசோதாவை எதிர்த்து வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:00:23 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி வாகன காப்பகத்தில் பைக் திருட்டு : மர்ம நபர் கைவரிசை
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:33:13 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:16:07 AM (IST)

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)










