» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வைகோ பிறந்தநாள்: மதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!
திங்கள் 22, செப்டம்பர் 2025 11:45:33 AM (IST)

தூத்துக்குடியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிறந்தநாளை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மதிமுகவினர் கொண்டாடினர்.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் 82 ஆவது பிறந்தநாள் விழாவினை மாநகரச் செயலாளர் முருக பூபதி தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. மாநில வெளியீட்டு அணி செயலாளர் நக்கீரன், மாநில தீர்மான குழு உறுப்பினர் பேச்சிராஜ், மாநில எம்எல்எப் பொருளாளர் கஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் ஆண்டாள், இளைஞரணி செயலாளர்கள் சரவண பெருமாள், பாலசுப்பிரமணியன், தெற்கு மாவட்ட மாணவரணி துணை செயலாளர் பொம்மு துரை, முன்னாள் ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜ், எம்எல்எப் திட்ட தலைவர் காசிராஜன், பொன்ராஜ், வேம்பு, பொய்யாளி, ஜெபக்குமார், கணேஷ் ராஜன், தொம்மை, முருகேசன் செந்தாமரைக் கண்ணன், பால்ராஜ், பெருமாள் சாமி, குமார் மனோகரன், பாலா, கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாத்தான்குளம் பள்ளியில் தேசிய இரட்டையர்கள் தினம்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:05:40 AM (IST)

காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய முதலீடு மாசோதாவை எதிர்த்து வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:00:23 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி வாகன காப்பகத்தில் பைக் திருட்டு : மர்ம நபர் கைவரிசை
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:33:13 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:16:07 AM (IST)

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)










