» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை: பட்டப்பகலில் பயங்கரம்!

திங்கள் 22, செப்டம்பர் 2025 11:13:08 AM (IST)

திருச்செந்தூரில் பஸ் நிலையம் அருகே பட்டப்பகலில் வாலிபரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பஸ் நிலையம் அருகே பிரதான சாலையில் இன்று காலை 10.45 மணியளவில் ஒரு வாலிபரை 3பேர் கொண்ட கும்பல் அரிவாளுடன் வழிமறித்தது. இதையடுத்து அந்த வாலிபர் அவர்களிடம் இருந்து தப்பியோடியுள்ளார். ஆனாலும்  அந்த கும்பல் அவரை விரட்டிச் சென்றது. 

பின்னர் அந்த வாலிபர் அங்குள்ள மரக்கடைக்குள் ஓடி தப்பிக்க முயன்றார். ஆனாலும், மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது. தகவல் அறிந்து திருச்செந்தூர் தாலூகா காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசேததனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் திருச்செந்தூர் அருகேயுள்ள ஆலந்தலை சுனாமி காலனியைச் சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (23) என்பது தெரியவந்தது. இவர் இன்று காலை ஆலந்தலையில் இருந்து திருச்செந்தூருக்கு பேருந்தில் வந்துள்ளார். பஸ்சில் இருந்து இங்கியதும் அவரை 3பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

கொலைக்கான காரணம் என்ன?

கொலை செய்யப்பட்ட மணிகண்டன், 17 வயது சிறுமியை காதலித்து வந்தாராம். கடந்த 3 நாட்களுக்கு முன்னர் அந்த சிறுமி மாயமானார். இதுகுறித்து அவரது உறவினர்கள் திருச்செந்தூர் தாலூகா காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தனது அக்கா வீட்டை விட்டுச் சென்றதற்கு மணிகண்டன்தான் காரணம் என்று அவரது தம்பியான 15 வயது சிறுவன் கருதியுள்ளார். 

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அந்த சிறுவன் தனது நண்பர்கள் 2பேருடன் சேர்ந்து மணிகண்டனை வெட்டிக் கொலை செய்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து 3 சிறுவர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் திருச்செந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

படித்த முட்டாள்Sep 22, 2025 - 06:03:51 PM | Posted IP 104.2*****

பழைய கொலை குற்றவாளிகளை தூக்குத் தண்டனை கொடுக்காததே எல்லா கொலைகளும் முக்கிய காரணம்

சிவ்Sep 22, 2025 - 11:59:00 AM | Posted IP 172.7*****

தொடர்ச்சியாக சமீப காலமாக இளஞ் சிறுவர்களை கொலை குற்றத்திற்கு பயன்படுத்துவது மிகுந்த வேதனை அளிக்கிறது.எப்படியும் சிறுவர்கள் நலன் கருதி 3மாதத்தில் வெளிவந்துவிடுவார்.என்ற எண்ணம்.இதில் தவறு இழைப்பநற்கு தூணாடிவிடுவதுமாக இருக்கிறது.எனக்கு தெரிந்த மட்டில் சிறார்கள் கொலை கொள்ளை குற்றத்தில் இறங்குகிறார் என்றால் அவன் தவறான வழியில் போகிற வராக இருக்கலாம்.குடும்ப உறவுகள் பாதுகாப்பு பராமரிப்பு போதுமான தாக இல்லாததால் தான் இவ்வாறு நடக்கிறது.இவர்களுக்கு நடக்கிறது.வண்டி கட்டுவதற்கான licence ரத்து செய்யப்படும்.வாழ்நாள் பூரா வண்டி ஓட்டுநர் உரிமம் ரத்து என்று கூற வேண்டும்.அவன் பயப்படுவான்.அவர் அவர் தகுதி ஏற்றாற் போல் வழக்காட வெளியே வர உறு துணை செய்கிறார்கள்.இளஞ்சிறார் விஷயத்தில் வழக்குரைஞர் வரக்கூடாது.அரசு அவனது நிலைப்பாடு பார்த்து பெற்றோர் அல்லது பாதுகாவலர்இடம் ஒப்பக்க வேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory