» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்!
ஞாயிறு 21, செப்டம்பர் 2025 6:57:38 PM (IST)

தூத்துக்குடியில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை, இசிஜி பரிசோதனை உயர் ரத்த அழுத்தம் பரிசோதனை, ஆஞ்சியோகிராம், இருதய மாரடைப்பு பிரச்சனைகள், ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைகள், பக்கவாத சிகிச்சைகள், புற்றுநோய் சிகிச்சைகள் (ஹீமோதெரபி), கல்லீரல், கணையம் சிகிச்சைகள், இருதய அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு தண்டு வட அறுவை சிகிச்சைகள், கர்ப்பப்பை அறுவை சிகிச்சைகள், பித்தப்பை கல் மற்றும் குடலிறக்க அறுவை சிகிச்சைகள், தீ காயம், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
இம்மருத்துவ முகாமில் கலந்து கொண்ட நோயாளிகளுக்கு சலுகை கட்டணம் வழங்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் தூத்துக்குடி அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை பங்கெடுத்தது. மாபெரும் இலவச மருத்துவ முகாம் ஏற்பாடுகளை தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் மற்றும் மேற்கு மண்டலத்தை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சியின் மருத்துவர் அணி செயலாளர் மருத்துவர் ருக்மணி ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாத்தான்குளம் பள்ளியில் தேசிய இரட்டையர்கள் தினம்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:05:40 AM (IST)

காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய முதலீடு மாசோதாவை எதிர்த்து வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:00:23 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி வாகன காப்பகத்தில் பைக் திருட்டு : மர்ம நபர் கைவரிசை
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:33:13 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:16:07 AM (IST)

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)










