» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நடுவிற்பட்டி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் மழைவளம் வேண்டி கஞ்சி கலய ஊர்வலம்!
ஞாயிறு 21, செப்டம்பர் 2025 6:49:13 PM (IST)

நடுவிற்பட்டி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் மழைவளம் வேண்டி கஞ்சி கலய ஊர்வலம் நடைபெற்றது.
மேல்மருவத்தூர் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அம்மா அவர்களின் பேரருளுடன் எட்டையபுரம் நடுவிற்பட்டி மெயின்ரோட்டில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் ஆடிப்பூர விழா சிறப்பான முறையில் நடைபெற்றது.
மழைவளம் வேண்டியும், விவசயம் செழிக்கவும், தொழில்வளம் பெருகவும், மக்கள் நலமுடன் வாழவும் வேண்டி மாபெரும் கஞ்சிக்கலயம் மற்றும் தீச்சட்டி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை ஆன்மிக இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி. முருகன் தொடங்கிவைத்தார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக மன்றத்தை வந்தடைந்தது.
கஞ்சி வார்ப்பு நிகழ்ச்சியை மன்ற தலைவர் சக்தி.சிவகாமி துவக்கி வைத்தார். முன்னதாக நடைபெற்ற கலச விளக்கு வேள்வி பூஜையை மாவட்ட மகளிர் ஒருங்கிணைப்பாளர் பத்மாவதி தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார். அன்னதான நிகழ்ச்சியை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் துவக்கி வைத்தார். விழாவில், கோவில்பட்டி மன்ற தலைவர் அப்பாசாமி, தகவல் தொழில் நுட்ப பொறுப்பாளர் கோபிநாத், மன்ற நிர்வாகிகள் ராஜதுரை, லெட்சுமி, மாரியம்மாள், பத்மாவதி, லெட்சுமி அம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாத்தான்குளம் பள்ளியில் தேசிய இரட்டையர்கள் தினம்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:05:40 AM (IST)

காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய முதலீடு மாசோதாவை எதிர்த்து வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:00:23 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி வாகன காப்பகத்தில் பைக் திருட்டு : மர்ம நபர் கைவரிசை
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:33:13 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:16:07 AM (IST)

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)











கனிராஜ்Sep 21, 2025 - 09:52:22 PM | Posted IP 104.2*****