» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விஸ்வகர்மா ஜெயந்தி விழா: மாட்டு வண்டி போட்டி!
ஞாயிறு 21, செப்டம்பர் 2025 6:46:14 PM (IST)

விளாத்திகுளத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி முன்னிட்டு விளாத்திகுளம் சுற்று வட்டார விஸ்வகர்மா மக்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் சின்ன மாடு மற்றும் பூஞ்சிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, இராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 99 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
முதலாவதாக நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 51 ஜோடி காளைகள் கலந்து கொண்ட இந்த மாட்டு போட்டி விளாத்திகுளம்- மதுரை சாலையில் நடைபெற்றது.இந்த போட்டியை விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த பூஞ்சிட்டு மாட்டுவண்டி போட்டியில் 48 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
சின்ன மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசை பரமசிவன் செமபுதூர், சீவலப்பேரி துக்காம்பிகா ஆகிய வண்டியும், இரண்டாம் பரிசு பரணி ஜெயம் ஜக்கம்மாள்புரம், சுரேஷ் -பாளையங்கோட்டை மாட்டு வண்டியும், மூன்றாவது பரிசு குப்பக்குறிச்சி, பூலாங்கால் மாட்டுவண்டியும் பெற்றன.
விழாவின் முடிவில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கும் ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசு தொகை, மற்றும் சால்வை அனுவித்து கவுரவிக்கப்பட்டனர். இந்த மாட்டுவண்டி போட்டி ஏற்பாடு பாலகுருநாதன் குருராஜ், முனியசாமி, மேலும் இந்த மாட்டு வண்டியை போட்டியை காண விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் சாலையின் இருபுறமும் கூடி நின்று கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாத்தான்குளம் பள்ளியில் தேசிய இரட்டையர்கள் தினம்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:05:40 AM (IST)

காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய முதலீடு மாசோதாவை எதிர்த்து வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:00:23 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி வாகன காப்பகத்தில் பைக் திருட்டு : மர்ம நபர் கைவரிசை
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:33:13 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:16:07 AM (IST)

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)










