» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கொலை முயற்சி, மிரட்டல்: 2பேர் குண்டர் சட்டத்தில் கைது!
வியாழன் 17, ஜூலை 2025 12:35:30 PM (IST)
தூத்துக்குடியில் கொலை முயற்சி - கொலை மிரட்டல் வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த 01.06.2025 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இளைஞர் ஒருவரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்த மாரியப்பன் மகன் மாரிதங்கம் (24) என்பவரையும்,
கடந்த 17.06.2025 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவரிடம் பணம் கேட்டு தகராறு செய்து அரிவாளை காட்டி கொலை மிரட்டல் வழக்கில் அம்பேத்கர் நகரை சேர்ந்த சேகர் மகன் சந்திரன் (21) என்பவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர்இளம்பகவத் உத்தரவின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










