» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆயுதங்களுடன் ரவுடித்தனம் செய்தால் கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை!!

புதன் 16, ஜூலை 2025 3:24:08 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள், ரவுடித்தனம் செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தில் வாள், அரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படும் வகையிலோ அல்லது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சுற்றித்திரிந்தாலோ, பொதுமக்களை அச்சுறுத்தி தீங்கு அல்லது காயங்களை ஏற்படுத்தினாலோ ஆயுத சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் சட்ட விரோதமாக ஆயுதங்களை தயாரிப்பவர்கள் மற்றும் விற்பவர்கள் மீது மேற்படி ஆயுதச் சட்டம் 1959ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேபோன்று சமூக வலைதளங்களில் ஆயுதங்களை வைத்துக்கொண்டு ரீல்ஸ் அல்லது புகைப்படத்தை பதிவேற்றம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது அல்லது மோதல்களை உண்டாக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல்துறை தெரிவித்துக் கொள்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இவ்வாண்டு இதுவரை, ஆயுதங்களுடன் சுற்றிதிரிந்து ரவுடித்தனம் செய்தல் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஆயுதச் சட்டத்தின் படி 97 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 187 எதிரிகள் மீது நடடிவக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நபர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் எவரேனும் வாள், அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினாலோ அல்லது ரவுடித்தனத்தில் ஈடுபட்டாலோ மாவட்ட காவல் அலுவலக எண் 0461 2340700, 9498101830 மற்றும் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 0461 2340393 ஆகிய எண்களுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம், தகவல் தெரிவிப்பவர்கள் விபரங்கள் இரகசியமாக வைக்கப்படும் என மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்து கொள்ளப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory