» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கார் மோதி மருந்து நிறுவன பெண் ஊழியர் சாவு
செவ்வாய் 15, ஜூலை 2025 8:25:45 AM (IST)
கோவில்பட்டி அருகே கார் மோதியதில் சாலையோரமாக வேலைக்கு நடந்து சென்ற மருந்து நிறுவன பெண் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் கணேசன் (40). பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரெங்கம்மாள் (38). இவர் மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் கோவில்பட்டி அருேயுள்ள திருமால் நகரில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று வழக்கம் போல காலையில் அவர் வீட்டில் இருந்து கிளம்பி வேலைக்கு சென்றுள்ளார். தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிரிவு சாலை வழியாக வேலை பார்க்கும் கம்பெனிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது கோவில்பட்டி நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாரதவிதமாக அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் அவர் மீது மோதிய கார் சாலையோரத்தில் தாறுமாறாக சிறிதுதூரம் ஓடி சாலையோரத்தில் நின்றது. இதில் காரின் முன்பகுதி சேதமடைந்ததுடன், டிரைவர் கல்லூரணியை சேர்ந்த விக்னேஸ்வரனும் காயமடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விக்னேஸ்வரனை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து ரெங்கம்மாள் உடலை மீட்டு அதே அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










