» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் படகுடன் பறிமுதல்!
செவ்வாய் 8, ஜூலை 2025 7:23:38 AM (IST)

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி தாளமுத்து நகர் விவேகானந்தர் காலனி கடற்கரையில் இன்று அதிகாலை கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி உதவி ஆய்வாளர் ஜீவ மணி தர்மராஜ் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர்கள் இருதயராஜ், குமார் இசக்கி முத்து, காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் ரோந்து பணில் ஈடுபட்டனர்.
அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக டபுள் இன்ஜின் பொருத்தப்பட்ட பைபர் படகில் சுமார் 30 கிலோ வீதம் 40 மூட்டைகளில் பீடி இலைகள் இருப்பது தெரியவந்தது. மேலும் போலீசாரை கண்டதும் பீடி இலைகளை கடத்த முயன்றவர்கள் தப்பி ஓடி விட்டார்கள். இதையடுத்து சுமார் ரூ.40 இலட்சம் மதிப்புள்ள பீடி இலைகள், பைபர் படகு மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை போலீசார் சுங்கத்துறை வசம் ஒப்படைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










