» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அகில இந்திய பொது வேலைநிறுத்தம் - மறியல் : தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலேசனை!

திங்கள் 7, ஜூலை 2025 8:35:33 PM (IST)



ஜூலை-9ஆம்தேதி நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் தொடர்பாக தூத்துக்குடியில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலேசனைக் கூட்டம் நடந்தது. 

தூத்துக்குடி சிஐடியு அலுவலகத்தில் தொமுச மாவட்டச் செயலாளர் சுசீ ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.ரசல், மாவட்டத் துணைச் செயலாளர் காசி, எல்பிஎப் மாவட்டச் கவுன்சில் தலைவர் வீ.முருகன், கருப்பசாமி, ராமசாமி, ஹெச்எம்எஸ் மாவட்டச் செயலாளர் துறைமுகம் சத்யா, ஐஎன்டியுசி சார்பில் மாநில அமைப்புச் செயலாளர் பி.ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.பாலகிருஷ்ணன், தூத்துக்குடி நகர தலைவர் எஸ்.சுரேஷ்குமார், ஏஐசிசிடியு மாவட்டத் தலைவர் மின்னல் அம்சத், மாவட்டச் செயலாளர் த. சிவராமன், மாநில செயற்குழு உறுப்பினர் சகாயம், ஏஐடியுசி மாவட்டப பொருளாளர் ஏ.பாலசிங்கம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் றி.சுப்பிரமணியன், பி.ஞானசேகரன் யுடியுசி மாவட்டச் தலைவர் எஸ்.சரவணன், மாவட்டச் செயலாளர் என்.டி.எஸ் அலெக்சாண்டர் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ஜூலை 9 அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் வெறிபெறச் செய்யும் வகையில் மாவட்டம் முழுவதும் விரிவான பிரச்சாரம், துண்டுபிரசுர விநியோகம், தெருமுனைக் கூட்டங்கள் நடத்திய அனைத்து தொழிற்சங்கங்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

துறைமுகம், அனல்மின் நிலையம், தமிழ்நாடு மின்சார வாரியம், போக்குவரத்து கழகம், பாரதி கூட்டுறவு நூற்பாலை, தாரங்கதாரா கெமிகல் தொழிற்சாலை ஆகிய நிறுவனங்களிலும் தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், மாவட்ட உப்பளங்கிலும் வெற்றிகரமாக நடத்தவது என்றும், தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் ஆகிய 3 மையங்களில் 3000 பேர் பங்கேற்கும் மறியல் போராட்டங்களை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஜூலை 9 புதன் அன்று காலை 10 மணிக்கு தூத்துக்குடியில் பழைய பேருந்து நிலையம் முன்பிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பும், திருச்செந்தூரில் தியாகி பகத்சிங் பேருந்து நிலையம் முன்பிருந்து புறப்பட்டு பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பும், கோவில்பட்டியில் பழைய பேருந்து நிலையம் முன்பிருந்து புறப்பட்டு ரயில்நிலையம் முன்பும் மறியல் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory