» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில் பொதுப்பெட்டி குறைப்பு : தெற்கு ரயில்வே அறிவிப்பு

வியாழன் 26, ஜூன் 2025 4:53:11 PM (IST)

பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில் வருகிற 4ஆம் தேதி முதல் ஒரு பொதுப்பெட்டி குறைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் (16792) பாலக்காட்டிலிருந்து தூத்துக்குடி வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில் தற்போது 18 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது, இதில் 11 பெட்டிகள் முன்பதிவு செய்யப்படாத பொது பெட்டிகளாகும். 

இந்த நிலையில் வரும் ஜூலை 4ஆம் தேதி முதல் ஒரு பொதுப்பெட்டி குறைக்கப்பட்டு ஒரு ஏசி பெட்டி அதிகரிக்கப்படும் என்று ரயில்வே நிர்காகம் அறிவித்துள்ளது. ஜூலை 4 முதல் தூத்துக்குடியில் நடைமுறைக்கு வருகிறது. 5ஆம் தேதி முதல் பாலக்காட்டில் நடைமுறைக்கு வருகிறது. பொதுப்பெட்டிகள் குறைக்கப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 


மக்கள் கருத்து

M BabuJun 27, 2025 - 08:00:13 PM | Posted IP 172.7*****

yen pa atha iluukka enginke thempu ilaya,, ilai ungaluku athu irukurathu porukalaya

KATHIRJun 27, 2025 - 06:00:01 PM | Posted IP 172.7*****

REDUCE ONE GENERAL COACH COMPARTMENT AND ADD A II A/C COACH THIS PALARUVI EXPRESS TRAIN.

JohnJun 26, 2025 - 08:25:25 PM | Posted IP 104.2*****

10 பொதுப்பெட்டிகள் வேறெந்த ரயிலிலும் கிடையாதே? அது கேரளாவில் டவுன் பஸ் போல 5 கிமி க்கு ஒரு நிறுத்தம் செய்கிறது. கொஞ்சம் வசதிகளை கூட்டி, டவுன் பஸ் பெட்டிகளை குறைத்து அது நிஜமாகவே ஒரு விரைவு ரயிலாக இயங்கட்டுமே. இன்னும் பயண நேரம் குறையும்போது அதை கோவைக்கோ ஈரோட்டுக்கோ நீட்டிக்கலாமே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



CSC Computer Education



Thoothukudi Business Directory