» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கக்கன் பிறந்த நாள் விழா : காங்கிரஸ் கட்சியினர் மரியாதை!
புதன் 18, ஜூன் 2025 11:46:17 AM (IST)

தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
எளிமையின் மறு உருவம், ஏழைகளின் பங்காளன் என போற்றப்படும் முன்னாள் அமைச்சர் கக்கனின் 116வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி போல்டன்புரத்தில் உள்ள கக்கன் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளர், காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர் மற்றும், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.பெருமாள்சாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது.
இந்நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி,தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், மாநகரச் செயலாளர் இக்னேசியஸ், மீனவர் அணி மிக்கேல் குரூஸ், ஆராய்ச்சி துறை ஆடிட்டர் சிவராஜ் மோகன் மாநில பேச்சாளர் பார்த்திபன், திமுக பிரமுகர் பெருமாள் எஸ்சி எஸ்டி பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாராம், சுந்தர்ராஜ், செல்வம், ஜோக்கின்ஸ், ஜான்வெஸ்லி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










