» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் : ஆட்சியரிடம் பாஜக சார்பில் கோரிக்கை!

திங்கள் 16, ஜூன் 2025 3:51:06 PM (IST)



மருதூர் மேலக்கால் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணையில் கார் கால சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று தெற்கு மாவட்ட பாஜக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பாஜக நிர்வாகிகள் அளித்த மனுவில், "மருதூர் மேலக்கால் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணையின் தென்காலினை உடனடியாக திறந்து  25ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களில் கார்கால சாகுபடியில் விவசாயப் பெருமக்கள் ஈடுபடுவதை உறுதி செய்ய வேண்டும். 

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் உள்ள தெற்கு மண்டல குப்பை மறுசுழற்சி மைய நுழைவு வாயிலை அதன் பின்புறம் உள்ள தொழில் புறம்போக்கு இடத்தின் வழியாக மாற்ற வேண்டும். திருநெல்வேலி - திருச்செந்தூர் மற்றும் திருச்செந்தூர்-திருநெல்வேலி செல்லும் அனைத்து பேருந்துகளையும் தென்திருப்பேரை   பேருந்து நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாவட்ட பொதுச் செயலாலர் ஆறுமுகம், மாவட்ட துனை தலைவர்கள் சிவராமன், மாசானம்,  மாவட்ட பொருளாளர் பரமசிவன், மண்டல் தலைவர்கள் மாதவன், மணிகண்டன், சிவஜோதி பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory