» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மரத்தில் ஆட்டோ மோதி விபத்து: பெண்கள் உட்பட 6 பேர் படுகாயம்
புதன் 28, மே 2025 8:34:09 AM (IST)

குலசேகரன்பட்டினத்தில் மரத்தில் ஆட்டோ மோதிய விபத்தில் பெண்கள் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை செனாய் நகர் வெங்கடாஜலபதி 3-வது தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் விஜயகுமார் (41). இவர் தனது குடும்பத்தினர், உறவினர்களுடன் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தார். நேற்று மதியம் திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் வாடகை ஆட்டோவில் குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு புறப்பட்டனர்.
திருச்செந்தூர் புளியடி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் (67) ஆட்டோவை ஓட்டிச் சென்றார். குலசேகரன்பட்டினம் எம்.ஜி ஆர்.நகர் பகுதியில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஆட்டோ நிலைதடுமாறி சாலையோர வேப்ப மரத்தில் மோதியது. இதில் ஆட்டோவின் முன்பகுதி அப்பளம் போன்று நொறுங்கியது.
இந்த விபத்தில் விஜயகுமார், அவருடைய மனைவி அனுப்ரியா (35), மகள் கயாந்திகா (10), ஹரிகிருஷ்ணன் மனைவி சசிகலா (41), சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த புஷ்பநகர் பாண்டுரங்கன் (65), ஆட்டோ டிரைவர் சிவசுப்பிரமணியன் 6 பேரும் படுகாயமடைந்தனர்.
உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பலத்த காயமடைந்த சிவசுப்பிரமணியனை மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










