» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நிலத்தரகர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும்: அகில இந்திய தலைவர் வி.என். கண்ணன் கோரிக்கை!
வெள்ளி 7, மார்ச் 2025 5:47:49 PM (IST)

ரியல் எஸ்டேட் நிலத்தரகர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் என தூத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அகில இந்திய தலைவர் வி.என். கண்ணன் வலியுறுத்தினார்.
இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேன்ட் டெவலப்பர்கள், நிலத்தரகர்கள் நலச்சங்க கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சேகர் தலைமை தாங்கினார். செயலாளர் முத்துராமன் ராஜா வரவேற்றார். கூட்டத்தில் அகில இந்திய தலைவர் வி.என். கண்ணன் சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் கூறுகையில், "ரியல் எஸ்டேட் நிலத்தரகர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வருகிற 22ஆம் தேதி ரியல் எஸ்டேட் தொழிலாளர்களின் எழுச்சி மாநில மாநாடு நடைபெறுகிறது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். மேலும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள், ரியல் எஸ்டேட் தொழில் முனைவோர்கள் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த மாநாட்டில் கூலி நிலத்தரகர் தொழிலை அமைப்பு சாரா தொழிலாளர் பட்டியலில் சேர்க்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த மாநாட்டில் தூத்துக்குடியில் இருந்து ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், லேன்டு டெவலப்பர்கள், மீடியேட்டர்கள் அதிகளவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
கூட்டத்தில் சங்கத்தின் மாநில செயலாளர் செந்தில்குமார், மாநில பொருளாளர் சரவணன் உட்பட ரியல் எஸ்டேட் துறையைச் சார்ந்த பலர் கலந்து கொண்டனர். நிறைவாக தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் கார்த்திக் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கருணாநிதி நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:38:24 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எர்ணாவூர் நாராயணன் போட்டி: கிறிஸ்துமஸ் விழாவில் அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 11:28:33 AM (IST)

தூத்துக்குடி பிரதான சாலையில் தேங்கி கிடக்கும் வாகனங்கள், குப்பைகள்: அப்புறப்படுத்த கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:13:58 AM (IST)

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு விற்பனை!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:34:38 AM (IST)

பைக் விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் சாவு: மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை!
திங்கள் 22, டிசம்பர் 2025 7:58:23 AM (IST)

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)










