» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அஞ்சலக அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 7, மார்ச் 2025 4:54:43 PM (IST)
தூத்துக்குடி கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் ‘அஞ்சலக அடையாள அட்டை’ பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சி.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தூத்துக்குடி கோட்ட அஞ்சலகங்களில் ‘அஞ்சலக அடையாள அட்டை’ எனும் சேவை மூலம் பொதுமக்கள் அடையாள அட்டை பெறும் வசதி அஞ்சல் துறையால் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மத்திய மாநில அரசின் பல்வேறு துறையின் நலத்திட்டங்களைப் பெற சான்றை நிரூபிக்க வேண்டியது அவசியமாகிறது. இந்திய அஞ்சல் துறையானது பொதுமக்களுக்கு அவர்களின் முகவரியை அங்கீகரிக்கும் வண்ணம் ‘அஞ்சலக அடையாள அட்டை’ எனும் சேவையை வழங்கி வருகிறது.
இந்த சேவையைப் பொதுமக்கள் அருகிலுள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். இந்த அடையாள அட்டையானது தேர்தல் கமிஷன், நுகர்வோர் பாதுகாப்புத் துறை மற்றும் தமிழக காவல் துறையினரால் முகவரி சான்றாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. புதிதாக இடம் பெயர்ந்து புதிய முகவரிக்குச் செல்பவர்கள் தங்கள் புதிய முகவரியை பல்வேறு ஆவணங்களில் மாற்ற மேற்கொள்ளும் சிரமத்தைத் தவிர்க்கும் வகையில் இந்த அடையாள அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதற்கான விண்ணப்பப் படிவத்தை அருகிலுள்ள அஞ்சலகத்தில் ரூ 20/-செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். அடையாள அட்டைப் பெறுவதற்கான கட்டணம் ரூ.250/- ஆகும். இந்த அட்டை மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் ரூ.100/- செலுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும் ஆதாரில் முகவரி மாற்றத்திற்கு இந்த அஞ்சலக அடையாள அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம். அஞ்சல் துறையின் இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கருணாநிதி நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:38:24 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எர்ணாவூர் நாராயணன் போட்டி: கிறிஸ்துமஸ் விழாவில் அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 11:28:33 AM (IST)

தூத்துக்குடி பிரதான சாலையில் தேங்கி கிடக்கும் வாகனங்கள், குப்பைகள்: அப்புறப்படுத்த கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:13:58 AM (IST)

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு விற்பனை!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:34:38 AM (IST)

பைக் விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் சாவு: மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை!
திங்கள் 22, டிசம்பர் 2025 7:58:23 AM (IST)

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)










